Friday, January 5, 2018

புற்றுநோய்க்கு விடை காண முயற்சி



                 நவீன வசதிகள், தொழில்நுட்பங்கள் மூலம் எந்த நோய்க்கும் தீர்வு காணும் மருத்துவ உலகை இன்றும் ஆட்டிப் படைக்கும் ஒரு வியாதி உண்டென்றால், அது புற்றுநோய். இன்ன காரணத்தால்தான் புற்றுநோய் வருகிறது என்று துல்லியமான தரவுகளுடன் இந்த நோய்க்கான காரணத்தை இதுவரை மருத்துவ உலகத்தால் வரையறுக்க முடியவில்லை. மர்மமும், ரகசியமும், பெரும் வேதனையும், உயிர் வலியும் நிறைந்த இந்தப் புற்றுநோய், மருத்துவ ஆய்வுகளின் எதிர்பார்ப்பைக் காட்டிலும் அதிகமாக ஒவ்வோர் ஆண்டும் தன் வீரியத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. முன்பு இந்தியாவைவிட, மேற்கத்திய நாடுகளில்தான் புற்றுநோய் மரணங்கள் அதிகமாக இருக்கும். ஆனால், இப்போது நம் ஊரிலும் 25, 30 வயதுகளில் எல்லாம் புற்றுநோய் தாக்குகிறது. என்ன காரணம்?

                            நகரமயமாக்கலை முக்கிய காரணமாகச் சொல்கிறார்கள் நிபுணர்கள். ஆரோக்கியமான உணவு, வாழ்க்கைச் சூழல் அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு, நகரங்களுக்கு வேகவேகமாகக் குடிபெயர்கின்றனர் கிராம மக்கள். காலையில் பல் துலக்கும் களிம்பு முதல், இரவு கொசுக் கடியில் இருந்து காத்துக் கொள்ளத் தடவப்படும் களிம்பு வரை அனைத்தும் கெமிக்கல். வெயிலில் நிறுத்திய காருக்குள் அதன் டாஷ்போர்டு செய்யப் பயன்படுத்திய பிளாஸ்டிக்கில் இருந்து பென்சீன் கசிந்து வரு கிறது. வீட்டில் அழகுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மெலமினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் யூரியா பார்மால்டிஹைடு என்ற வேதிப்பொருளை வெளியேற்றுகிறது. நம்மைச் சுற்றிக் குவிந்துகிடக்கும் பலவித பிளாஸ்டிக்குகளில் இருந்து டயாக்சின்கள் கசிகின்றன. நாம் அன்றாடம் உண்ணும் உணவு தானியங்கள், காய்கனி களில் நுண்ணிய ரசாயனத் துணுக்குகளும், கதிர்வீச்சுகளும் கலந்திருக்கின்றன. ஆனால், சம்பந்தப்பட்ட எந்தத் துறை யினரைக் கேட்டாலும், 'ஐயோ... யார் சொன்னது? எங்கள் கசிவுகள் பாதுகாப்பான வரையறைக்கு உட்பட்டுத்தான் இருக்கிறதுஎனச் சத்தியம் செய்வார்கள்.

                          புற்றுநோய்த் தடுப்பில் உணவுப் பழக்கத்துக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு. இதற்குச் சரியான உதாரணம், இந்தியர்கள் மட்டும் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படாததைக் குறிப்பிடலாம். இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று மேற்கத்திய விஞ்ஞானி கள் ஆராய்ந்ததில், உணவில் இந்தியர்கள் சேர்க்கும் மஞ்சளின் மகிமையை உணர்ந் திருக்கிறார்கள்! மஞ்சளின் curcuma curcumin சத்து நம் செல்களில் உள்ள NF kappa-B என்ற புரதக்கூட்டைச் சீரமைத்து நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்வ தாலேயே, புற்று நம்மை உற்றுப் பார்க்கா மல் இருக்கிறது. கிட்டத்தட்ட 250 வகை யான நோய்களை வராமல் காக்கும் குணம் மஞ்சளுக்கு உண்டு.

                                   அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகப் புற்றுநோய் துறைப் பேராசிரியர் பரத் அகர்வால் தனது 'ஹீலிங் ஸ்பைசஸ்என்ற ஆங்கில நூலில், 'மஞ்சள் மட்டுமல்ல; இந்தியர்களால் சமையலில் பயன்படுத்தப்படும் பல நறுமணப் பொருட்களுக்குப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. இந்துக்கள் கொண்டாடும் துளசியாகட்டும், இஸ்லாம் வலியுறுத்தும் கருஞ்சீரகமாகட்டும் இரண்டுமே புற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவை. கறிவேப்பிலை, லவங்கப்பட்டை, இஞ்சி, பூண்டு, வெந்தயம், ஏலம், சாதிக்காய் என சாதாரணமாக உணவில் மணமூட்ட உபயோகப்படுத்தும் அத்தனையும் நோய்த் தடுப்புக் காரணிகளாகச் செயல்படுகிறது!என்கிறார். இந்தப் பொருட்களை அன்றாடம் சமையலில் பயன்படுத்துவதுதான் நம் உணவுக் கலாசாரம். ஆனால், சமீபமாக நாமோ நேரம் இல்லை என்ற காரணத்தைச் சொல்லி இவற்றை ஒதுக்குகிறோம். அதிலும் அதிஆபத்தாக, குழந்தைகளுக்கு இந்த உணவுப் பழக்கத்தை நாம் அறிமுகப்படுத்துவதே இல்லை.

                             தினசரி உணவில் அதிகபட்சமாக இயற்கை விவசாயத்தில் விளைந்த பழங்களும் காய்கறிகளை யும் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, சிவந்த நிறம் உள்ள பப்பாளி, கொய்யா, பட்டை தீட்டப்படாத தானியங்கள், ராகி, கம்பு, வரகு, தினை போன்ற சிறுதானியங்களை முடிந்தவரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எப்போது இனிப்பு தேவைப்பட்டாலும் வெள்ளைச் சீனியைத் தேடி ஓடுவதைத் தவிர்த்து பனை வெல்லம், தேன் முதலியவற்றைப் பயன்படுத்த வேண்டும். பால் இல்லாத பச்சைத் தேநீர் (green tea) செக்கில் ஆட்டிய நாட்டு எண்ணெய், இல்லாத தின்பண்டங்கள், மீன், உடல் உழைப்புக்கு ஏற்றபடி நாட்டுக் கோழி இறைச்சி என நமது உணவுப் பழக்கத்தை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.

                           புற்றுநோய்க்கு எப்படியேனும் தீர்வு தேடும் தேடலில், வளர்ந்த நாடுகள் பல்வகை மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து கூட்டு சிகிச்சைமுறையை முயற்சிக்கின்றன. ஆனால், இங்கு இந்தியாவிலோ வாழ்வின் விளிம்பில் நிற்கும் ஒரு புற்றுநோயாளி, 'வேறு ஏதேனும் மாற்று மருத்துவம் பயன்படுத்திப் பார்க்கலாமா?’ என்ற கேள்வியை மருத்துவரிடம் கேட்கவே முடியாது. கேட்டால், 'எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. அது உங்கள் பாடு!என்று சடாலென விலகிக்கொள்வார்கள்.

                               சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா எனப் பல பாரம்பரிய மருத்துவமுறைகள் இருக்கும் இந்தியாவில், ஒவ்வொரு துறை மருத்துவரும் ஈகோ மறந்து இணைந்து, தத்தம் துறையின் நுட்பங்களை ஒருங் கிணைத்து மருத்துவ உலகின் பெரும் சவாலாக இருக்கும் புற்றுநோய்க்கு விடை காண முயற்சித்தால் தீர்வு சாத்தியமே!