Monday, February 16, 2026

பாட்டி சொல் கேள்

பாட்டி சொல் கேள்

பாட்டி அடிக்கடி சொல்லுவாள்

நீரால் கோலம் போடாதே

நெற்றியைக் காலியாய் விடாதே

குச்சியைக் கொளுத்தி வீசாதே

இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே

காலையில் அதிகம் தூங்காதே

தொடையில் தாளம் போடாதே

தரையில் வெறுதே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதே

நகத்தை நீட்டி வளர்க்காதே

ஆலயம் செல்லத் தவறாதே

அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே

சந்தியில் நீயும் உண்ணாதே

விரிப்பைச் சுருட்ட மறக்காதே

பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே

ஈரம் சொட்ட நிற்காதே

நாமம் சொல்ல மறக்காதே

நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே

நின்று தண்ணீர் குடிக்காதே

எதையும் காலால் தட்டாதே

எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே

எந்தன் குடியில் மூத்தோரே

எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே

என்றும் வளமாய்த் தீர்வோரே

என்ன அழகான வரிகள். ஆழமான வாழ்வியல் நெறிமுறைகள். இனியாவது இதையெல்லாம் நாமும் பின்பற்றவோம். நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்போம்.

No comments:

Post a Comment