Saturday, May 23, 2020

வாழைப்பழம்


வாழைப்பழம்
      முக்கனிகளில் ஒன்றாக இருப்பது வாழைப்பழம் ஆகும்.பல்வேறு வகையான வாழைப்பழங்கள் கிடைக்கின்றனஅவற்றிலும் மருத்துவ குணங்கள் இருக்கிறது. அனைத்து காலங்களிலும் கிடைக்க கூடிய பழமாக உள்ளது.

வாழை பழத்தின் வகைகள் :
''வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது.

சத்துக்கள்

இதில் வைட்டமின் , வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும். இருப்பினும் தனித்தனியே ஒவ்வோர் வாழைப்பழத்தின் சிறப்பு அம்சத்தையும், பலன்களையும் பார்க்கலாம்.

செவ்வாழை பழம்

வாழை பழங்களில் அதிக சாது உடைய பழம் செவ்வாழை பழம் ஆகும் . இதில் பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், வைட்டமின்-சி, ஆன்டி ஆக்ஸிடென்ட், நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சரும நோய்களுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணத்தைத் தருகிறது. தொற்றுநோய் கிருமிகளைக் கொல்லும் ஆற்றலை கொண்டது. சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.செவ்வாழை அவசியம் சாப்பிடக் கூடியவர்கள் மாலைக்கண் நோய், கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். இதை தினம் ஒன்று சாப்பிட பார்வை தெளிவாகும்

ரஸ்தாளி

பொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி - 6, மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.உடல் சோர்வு நீங்கும். தினமும் இரவு1 ரஸ்தாளி உட்கொண்டால் தூக்கமின்மை பிரச்னை சரியாகும்.அத்தோடு மன அழுத்தமும் குறையும். உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

கற்பூரவள்ளி
இந்த வாழைப்பழத்தில் செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் உள்ளது. இது வேறு எந்தப்பழத்திலும் காணப்படுவதில்லை. இது உடலுக்கு தேவையான ஜீரன சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் சூட்டைத் தணிக்க வல்லது. உடலுக்கு உடனடி எனர்ஜி டானிக்காக விளங்குகிறது. உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.நரம்புகளுக்கு வலுவினைத் தரும்.அனைத்து பகுதிகளிலும் கிடைக்க கூடிய பழமாகவும் உள்ளது.
பச்சைப்பழம்
  
இதில் நார்ச்சத்து, வைட்டமின், மினரல் போன்றவை உள்ளது. பொதுவாக, எல்லோரும் பச்சைப்பழத்தை உண்ணலாம். பச்சைப்பழம் குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. இதயத்துக்கு வலு கூட்டுகிறது. மேலும், உடல் எடையை குறைக்கச் செய்கிறது. உடல் குளிர்ச்சியை உண்டாக்கும்,
பித்த நோய் குணமாகும்.

நேந்திர பழம்
அதிகமான பொட்டாசியம் இந்த பழத்தில் இருப்பதால் இந்த பழம் தினமும் காலை உணவுக்கு பின் எடுத்துக் கொண்டால் இதயத்துக்கு நல்லது. இதயத் துடிப்புக்கும் நல்லது. கெட்ட கொழுப்பை குறைக்கும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தி செரிமானத்தை அதிகரிக்கும். நல்ல
தூக்கத்தை கொடுக்கும் Prebiotics நிறைய உள்ளது.

மட்டி பழம்

இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். இதில் குறைந்த அளவு புரதம் மற்றும் உப்புச்சத்து இருக்கிறது. சிறுநீரகப் பிரச்னைகளை சரி செய்யும். இரைப்பை மற்றும் குடல் கோளாறு உள்ளவர்கள் மற்றும் நாள்பட்ட அல்சர் பிரச்னைஉள்ளவர்கள் இந்த மட்டி வாழைப்பழத்தினை தொடர்ந்து சாப்பிடலாம்.

யார் யார் சாப்பிட கூடாது?

நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் அதிகம் சாப்பிடக் கூடாது. சாப்பிடுவதற்கான சரியான நேரம்வெறும் வெயிற்றில் காலையில் வாழைப்பழம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் வாழைப்பழம் உட்கொண்டால் அசிடிட்டி உண்டாகும். அதோடு, அடுத்தடுத்து உணவுகளை எடுத்துக் கொள்வதிலும் சிக்கல் ஏற்படும். அதனால் மதியம் அல்லது இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டிய வாழைப்பழம்

சென்னை போன்ற பெருநகரங்களில் மோரீஸ் என்று சொல்லக்கூடிய வாழைப்பழம் எல்லா இடங்களிலும் விற்கப்படுகிறது. இந்த மோரீஸ் வாழைப்பழம் திசு வளர்ப்பு முறையில் விளைய வைக்கக் கூடிய பழமாகும். மரபணு மாற்றப்பட்ட இந்த வாழைப்பழங்களை சாப்பிடக் கூடாது.