மூட்டு வலி வருவதற்கு காரணம் என்ன?
உடல் எடை :
50 சதவீதத்திற்கும் மேல் மூட்டு வலியால்
அவதிப்படுபவர்களுக்கு காரணம் உடல் பருமன் தான். தலை முதல் தொடை வர உள்ள மொத்த பாரங்களும்
மூட்டின் மீது குவிவதால், மூட்டு வலி உண்டாகி இறுதியில் தேய்மானத்திற்கு வழிவகுக்கின்றது.
குறைவான எண்ணெய் பயன்படுத்துதல் :
சிலர் மிகக் குறைவாக அல்லது எண்ணெயே இல்லாமல்
சமைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். எண்ணெயே உபயோகிக்கக் கூடாது என எந்த மருத்துவத்திலும்
சொல்லவில்லை. உடலுக்கு தேவையான கொழுப்பு, எண்னெயிலிருந்து பெறப்பெடுகிறது. கொழுப்பு
அமிலங்கள் அதிகமாக எண்ணெயில்தான் கிடைக்கின்றது. இவைதான் மூட்டுச் சவ்வை பாதுகாக்கின்றது.
சூரிய காந்தி எண்ணெய், கடலென்ணெய், நல்லென்ணெய் ஆகியவ்ற்றை கட்டாயம் உணவில் சேர்த்திடுங்கள்.
நடை பயிற்சி இல்லாதது :
குறைந்தது அரை கிலோமீட்டராவது
நடக்க வேண்டும் என மனதில் உறுதி கொள்ளுங்கள். இதனால் ஒட்டுமோத்த உடலுகும் எலும்பிற்கும்
நன்மை கிடைத்திடும். தசை மற்றும் எலும்புகளுக்கு தேவையான பயிற்சி கிடைப்பதால் பலம்
பெறும்.
பால் பொருட்கள் சாப்பிடாதது :
பால், மோர், தயிர் என
எந்த பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடாத போது அவற்றால் கால்சியம் பற்றாக் குறை வர வாய்ப்புண்டு.
குறிப்பாக மோரை பாலை விட இருமடங்கு கால்சியம் கிடைக்கிறது. ஆகவே கட்டாயம் தயிர், பால்
போன்ரவற்றை தினசரி உணவில் சேர்த்த்துக் கொள்ளுங்கள். பால் அலர்ஜி இருப்பவர்கள் கீரையை
கண்டிப்பாக உணவில் சேர்க்க வேண்டும்.
மூட்டை பலப்படுத்தும் உணவுகள் :
புருக்கோலி, எள்ளு,
வெங்காயம், அனைத்துவித கீரைகள், எண்ணெய், பால் வகைகள், போன்றவை உங்கள் மூட்டு மற்றும்
மூட்டு இணைப்புகளை பலப்படுத்தும் உணவுகள். இவற்றை கட்டாயம் உணவில் இருக்கும்படி பார்த்துக்
கொள்ளுங்கள்.
மூட்டு வலி வந்தவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
:
சோள எண்ணெய் : சோள எண்ணெயில் அதிக ஒமேகா 3 அமிலம் இருப்பதால் அவை மூட்டு வலியை இன்னும்
அதிகரிக்கச் செய்திடும். ஆகவே சோள எண்ணெயை பயன்படுத்துவதை தவிருங்கள்
தக்காளி: தவிர்க்க வேண்டிய முக்கிய பழம். தக்காளியின்
விதைகளில் யூரிக் ஆசிட் அதிகம் உள்ளது. எனவே தக்காளியை அதிகம் சாப்பிட்டால், உடலில்
யூரிக் ஆசிட்டின் அளவானது அதிகமாகி, வலியானது இன்னும் கடுமையாகிவிடும். எனவே இதனை தவிர்ப்பது
நல்லது.
சர்க்கரை: மூட்டு வலிகளுக்கு சர்க்கரை மிகவும் கேடு
விளைவிக்கும் ஒரு உணவுப் பொருள் இது. ஏனெனில் சர்க்கரை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை
அதிகமாவதால், மூட்டுகளில் அழுத்தம் அதிகரித்து, வலியும் அதிகமாகும்.