Thursday, February 2, 2023

திதி கொடுக்கும் தேதி தெரிந்து கொள்வது எப்படி

 திதி கொடுக்கும் தேதி தெரிந்து கொள்வது எப்படி

ஒரு நாளைக்கு 60 நாழிகை. தமிழ் கணக்குப்படி சூரிய உதய நேரத்திலிருந்து (தோராயமாக காலை 6 மணி) நாள் ஆரம்பம். ஆங்கில கணக்கென்றால் இரவு 12க்கு பிறகு நாள் ஆரம்பம். ஒரு மணிக்கு 2.5 நாழிகை. ஒரு மாதத்திற்கு இரண்டு பக்ஷம், சுக்கிலபக்ஷம் (வளர்பிறை), கிருஷ்ணபக்ஷம் (தேய்பிறை).

அமாவாசைக்கு அடுத்த தினமான பிரதமையிலிருந்து, பௌர்ணமிவரை சுக்கிலபக்ஷம்.

பௌர்ணமிக்கு அடுத்த தினமான பிரதமையிலிருந்து, அமாவாசை வரை கிருஷ்ண பக்ஷம்.

இப்பொழுது இறந்த திதி (நாள்) என்ன என்று குறித்துக்கொள்ள வேண்டும்.

அந்த திதி அன்றைய நாளில் முற்பகல் 11 மணி வரை இருக்க வேண்டும்.

பஞ்சாங்கத்தில் நாழிகையில்தான் நாள் கணக்கு போட்டிருப்பார்கள். அதனை 2.5 ஆல் வகுத்தால் மணி கிடைக்கும். இரண்டு நாட்களுக்கும் ஒரே திதி (நாள்) வந்தால், என்று, 11 மணிக்கு, அந்த திதி முழுமையாக வருகின்றதோ அன்று செய்யவேண்டும்.

உதாரணமாக- சித்திரை மாதம், ஆங்கில தேதி 17 அன்று விடியற்காலை 2 மணிக்கு இறப்பு ஏற்படின், அஃது பஞ்சாங்கத்தின்படி, ஆங்கில தேதி 16 அன்று 50 நாழிகைக்கு என்ன திதி வருகின்றதோ அதுதான் நாள். அது வளர்பிறை ஏகாதசி என்று வைத்துக்கொள்வோம்.

அடுத்த ஆண்டு அதே சித்திரை மாதம், என்ன பக்ஷமோ, அதாவது வளர்பிறை ஏகாதசி, முழுமையாக முற்பகல் 11 மணிக்கு இருக்கும் நாளில் செய்யவேண்டும்.

முழுமையாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.