புவியீர்ப்பு சக்தி!
பூமி சுற்றுகிற போது, விமானங்கள் ஏன் பறக்கின்றன? மேலே நின்றுவிட்டு இடம் வந்தவுடன் கீழே இறங்கலாமே.
அப்படி பார்த்தால் நீங்கள் ஒரு பலூன் கயிற்றில் மூன்று மணி நேரம் தொங்கினால் சிங்கப்பூர் வந்துவிடும். டபக் என்று குதித்து விடலாம். இன்னும் ஒரு நாள் தொங்கினால் போதும், அமெரிக்காவே வந்துவிடும்.
ரங்கா காத்துக் கொண்டிருப்பார். Tarzan அலம் விழுதை பிடித்துக் கொண்டு, காட்டில் தாவுவது போல், ரங்காவுக்கு வத்த குழம்பு, ஊறுகாய் மற்றும் மோர் மிளகாய் கொடுத்துவிட்டு, சாயந்திரம் என்ன டிபன் வேண்டும்? நான் அங்கே இருந்து கயிற்றில் தொங்கிக்கொண்டு கொண்டு வந்து விடுகிறேன்!
ரங்கா :: நேத்திக்கு நீங்க தொங்கும் போது, டிபன் பாக்ஸ் ஓட்டை! எல்லா சாம்பாரும் பசுபிக் மகா சமுத்திரத்தில் கொட்டி விட்டது. ஒரு சாம்பாரை வைத்து கூட தொங்க தெரியாதா?
ராஜேஷ் சத்யா :: மன்னிக்க வேண்டும் ரங்கா! நாளைக்கு காலைல 7 மணிக்கு நில்லுங்க கரெக்டா பொங்கல் கொண்டு வருகிறேன்!!
என்று சொல்லிவிட்டு இலவசமாக அமெரிக்கா போகலாம்.
BUT அது சாத்தியமில்லை! அறிவியலில் இப்படி எல்லாம் நடக்காது.
காரணம் GRAVITY, என்ற புவியீர்ப்பு சக்தி! அது மொத்தமாக உங்கள் ஊரையே தூக்கி கொண்டு சுற்றுகிறது! மீனம்பாக்கம் அங்கு உள்ள விமானம், விமானம் பறக்கும் காற்று, விமானம் உள்ளே உள்ள பணிப்பெண், எல்லோரும் எல்லாமே பூமியில் அட்டை போல் ஒட்டிக் கொண்டுள்ளது.
புவியீர்ப்பு சக்தி என்பது ஒரு பசை மாதிரி. இப்படி அப்படி போகலாம். ஒரு கப்பல் வெளியே குதித்தால் மட்டுமே கப்பலை விட்டு வெளியே வரமுடியயும்!!
பூமி சுற்ற விட்டு, நாம் அப்படியே நிற்க வேண்டும் என்றால், நீங்கள் புவியீர்ப்பு படலம் விட்டு வெளிய எவ்வளவு உயரம் சென்றாலும் அது குறையும், ஆனால் முற்றிலும் விலகாது. Space shuttle கூட விமானம் போல் தான் சக்தி ஒன்றை பயன்படுத்தி பறக்க முடியும். விண்வெளியில் ரொம்ப தூரம் பறக்க, அணுசக்தியை பயன்படுத்துகிறார்கள். ஒரு இடத்தில் "பொத்"
இன்று கீழே விழலாம், நான் நீங்கள் சொல்வது போல் மிதக்க முடியாது!
புவியீர்ப்பு என்பது முடிவிலியை தவிர பூஜ்ஜியமாக மாற முடியாது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து நாம் விலகிச் செல்லும்போது அது பலவீனமடைகிறது ஆனால் அது பூஜ்ஜியமாக மாறாது.
ஈர்ப்பு விசை நேர்மாறான விகிதத்தில் உள்ளதுஆர்2ஆர்2.
இங்கே,ஆர்ஆர்பூமியின் மேற்பரப்பில் இருந்து புள்ளியின் தூரம்.
ஈர்ப்பு விசை சூத்திரம், F=G(மீ1×மீ2)ஆர்2(மீ1×மீ2)ஆர்2 இங்கே F இரண்டு உடல்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை,மீ1மீ1முதல் உடலின் நிறை,மீ2மீ2இரண்டாவது உடலின் நிறை,ஆர்ஆர்இரண்டு உடல்களின் மையங்களுக்கு இடையே உள்ள தூரம்
எனவே, புவியீர்ப்பு முடிவிலியைத் தவிர பூஜ்ஜியமாக இருக்க முடியாது..
இந்த பூமி என்பது நீங்கள் என்று வைத்துக் கொண்டால், உங்கள் தலையில் இருக்கும் தலை முடி போல் காற்று மண்டலம் உள்ளது. அது டோபா இல்லை. ஒரிஜினல் முடி!!
அதில் வசிக்கும் ஒரு கண்ணுக்கு தெரியாத பூச்சி தான் ஒரு ஆகாய விமானம். அந்த பூச்சி தலைமுடி விட்டு வெளியே வர முடியாது.
உங்கள் மேல் உள்ள பூச்சி உங்களை நகர விட்டு உங்கள் தலையில் இருந்து காலுக்கு குதிக்க முடியாது. அதுவாக பறந்து தான் நகர வேண்டும். தலைமுடி atmosphere காற்று மண்டலம் உங்கள் மீது ஒட்டியுள்ளது. விமானம் பூச்சி விட சின்னதாக முடியில் ஒட்டிக்கொண்டு நகரும். பூமி நம் தலை சைசுக்கு இருந்தால், விமானம் பூச்சி கூட கிடையாது. உங்கள் தலை சுற்றுவது அந்த பூச்சிக்கு தெரியாது. முடியுடன் சேர்ந்து தலையில் உள்ள எல்லாமே சுற்றும்!! எனவே பூமி சுற்ற விட்டு Tarzan போல் தாவுவது அல்லது குதிப்பது சாத்தியமில்லை!.....