கணவன் மனைவி
கணவன் மனைவி ஒரு தராசை போல ஒன்று ஏறினால் மற்றொன்று இறங்கி வந்து விட்டு கொடுத்து பழக வேண்டும்.
துணையின் குணம் இது தான் என்று தெரிந்த பிறகு மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்காட்டுவதில் எந்த லாபமும் இல்லை.
●கணவன் மனைவி இரண்டு பேரும் ஒரே நேரத்தில் கோபப்படாதீர்கள்.
●உங்கள் இருவரின் சண்டையில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றால் அந்த வெற்றிையை மற்றவருக்கு விட்டு கொடுங்கள்.
●தயவு செய்து பழைய தவறுகளை சுட்டிக்காட்டி பேசாதீர்கள்.
●உங்கள் இருவரின் சண்டையில் குடும்ப உறுப்பினர்களை இழுத்து பேசாதீர்கள்.
●ஒரு பிரச்சனையில் எது தவறு என்று தேடுங்கள் யார் செய்த தவறு என்று அல்ல.
●முதலில் அடுத்தவரை முழுமையாக பேச விடுங்கள் தடை போடாதீர்கள்.
●IPL match, football match, Pubg, face
book,Quora, twitter , Instagram, politics, office pending works யை விட உங்கள் மனைவியின்/கணவரின் உணர்ச்சி , உடல் நிலை , மனநிலை இவற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
●அடுத்தவரை உங்களது கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்கிற எண்ணம் தவறானது.
●நீங்கள் உங்கள் துணைக்கு கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த பரிசு உங்களின் நேரம்.
●ஆண்களுக்கு (பெருவாரியான) ஞாபகம் சக்தி குறைவு அதாவது மனைவி சம்பந்தப்பட்ட விடயங்களில் மனைவிக்கோ அதிக ஞாபக சக்தி அதிகம் மனைவியின் பிறந்த நாளை மறந்து விடுவது திருமண நாளை மறந்து விடுவது.
●நமது பலவீனம் எதுவோ அதை வெளிப்படையாக அறிவித்து விடுங்கள் பிறகு அதை சுட்டிக்காட்டி சண்டை வருவதை தவிர்க்கலாம் அல்லவா. (அந்த பலவீனத்தை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று நீங்கள் கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டும்)
●உங்களது துணையின் குறைகளை எந்த காரணத்திற்காகவும் யாரிடமும் பகிராதீர்கள் அவர்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கப் போவது இல்லை.
இந்த மாதிரி வாழ்ந்தால் போதும் கணவன் மனைவி உங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் வராது மிக மகிழ்ச்சியாக வாழ முடியும்.