Sunday, February 1, 2026

பக்தி புரியவேயில்லை மாறுகிறது

 பக்தி புரியவேயில்லை மாறுகிறது



             முன்னாடியெல்லாம் கோவிலுக்கு போகும் போது அவ்வளவா கூட்டம் இருக்காது ஓரளவுக்கு இருக்கும் ஆனால் இப்ப சில வருடங்களாக எந்த கோவிலுக்கும் போக முடியல.. சமயபுரத்துக்கு உள்ளே நுழையவே முடியல திருச்செந்தூர் அளவில்லா கூட்டம் திருவண்ணாமலை அளவில்லா கூட்டம். மக்கள் தொகை கூடிருச்சா இல்லை பக்தி கூடிருச்சான்னு தெரியல.. முக்கியமா சண்டை நிறைய நடக்குது பக்தர்களே அடிச்சிக்கிட்டு சாகுறாங்க... க்யூ பெரிசா இருப்பதால் பலர் மயங்கி விழுந்து சாகுறாங்க.. கடவுளை பார்க்க கட்டணங்கள் அதிகமா இருக்கு இது எங்க போய் முடியுமுன்னே தெரியலங்க எல்லாருக்கும் அந்த சாமிதான் நல்ல புத்தி கொடுக்கனும்...

             பக்தியா போறாங்களான்னு தெரியல ஏன்னா வழி நெடுக தின்னுகிட்டே பேசிகிட்டே போகுதுங்க என்னவோ பொருட்காட்சிக்கு போற மாதிரி.. தவறனான வழிகாட்டுதல் தவறான பரிகாரங்கள் வேண்டுதல்கள் என யூடியூப்பில் நாளோரு கிழமை நாளோரு செய்தியின்னு தீயா பரவுது. உண்மையா பொய்யான்னு யாரும் யோசிக்கிறது இல்லை.. விளக்கில் விளக்கு போடுவோம் எலுமிச்சை பழத்தில் போடுவோம்.. இப்ப தேங்காய், வாழைப்பழம், பரங்கிக்காய், ன்னு என்னென்ன விளக்கோ போடுறாங்க இதெல்லாம் யாரு கொளுத்திப் போடுறாங்கன்னே தெரியல சாமிய கூட நிம்மதியா கும்பிட முடியல கோவிலுக்கு போற எண்ணம் வர மாட்டேங்குது...

              என்னடா இது கடவுளுக்கு வந்த சோதனையா இல்லை மனுசனுக்கு வந்து சோதனையான்னு ஒரே குழப்பமா இருக்கு. விரத முறையெல்லாம் கைவிட்டுட்டு புதுசா கண்டுபிடிச்சு என்னென்னவோ செய்யுதுங்க... நேற்று மாட்டுப் பொங்கல் நம் முன்னோர்களுக்கு கறி, கருவாடு, நண்டு, மீன் தானே சமைத்து படையல் போடுவோம் ஆனால் இப்ப பல வீடியோக்களில் பார்த்தேன் பிரியாணி செய்து படையல் போடுகிறார்கள்.. ஹா..ஹா.... இனிமேல் படையலில் பிரியாணியும் சேரும் போல... எது போட்டா என்ன நமக்கு பிடிச்சதை செய்ய வேண்டியதுதான்.. எல்லாமே மாறுகிறது நாமும் மாறனுமா தெரியல..