Followers

Wednesday, June 17, 2026

தென் இந்தியாவின் சிரபுஞ்சி - ஆகும்பே

 தென் இந்தியாவின் சிரபுஞ்சி - ஆகும்பே

·         தென் இந்தியாவின் சிரபுஞ்சி" என்று அழைக்கப்படும் மழைக்காடுகள் நிறைந்த சொர்க்கம்போல் காட்சி தரும் இந்த ஊர் சூரிய அஸ்தமனம் பார்க்க விரும்புவோர் மற்றும் இயற்கையை நேசிப்போருக்கு ஏற்ற இடமாகும்.

·         ஆண்டுக்கு சுமார் 7,600 மில்லிமீட்டர் மழை பொழிவை எதிர்கொள்ளும் இந்த கும்பே நகரம், கர்நாடகா மாநிலத்தில் சிமோகா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது

·         பெங்களூரிலிருந்து சுமார் 380 கிலோ மீட்டர் பயணப்பட்டால், இந்த அழகிய எழில் கொஞ்சும் நகரத்தைச் சென்றடையலாம்..

·         இந்தியாவிலேயே அதிக மழைப்பொழிவை எதிர்கொள்ளும் இரண்டாவது நகரம் கும்பே.

·         மழைக்காடுகளை ஆராய்வதற்கு என்றே பிரத்யேகமாக இந்தியாவில் நிறுவப்பட்ட மழைக்காடு ஆராய்ச்சி மையம் அகும்பேவில் தான் இருக்கிறது.

·         அதே ஆராய்ச்சி மையத்தில் தான் இந்தியாவிலேயே முதல் முறையாகத் தானியங்கி வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

·         ராஜநாகங்கள் இக்காட்டில் மிக அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

·         இங்கு குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி, பர்கானா நீர்வீழ்ச்சி, ஒனக்கே அப்பி நீர்வீழ்ச்சி, ஜோகிகுன்டி நீர்வீழ்ச்சி என அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் அதிகளவில் உள்ளன.

·         சன்செட் பாயிண்ட் என்றழக்கப்படும் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து, ஒட்டுமொத்த அகும்பே நகரத்தையும் அதன் இயற்கை எழிலையும் பார்த்து ரசிக்கலாம்.

·         கும்பே நகரத்துக்குச் செல்பவர்கள், கட்டாயம் வெண்ணிலா சுவை கொண்ட தேநீரைப் பருக மறந்துவிடாதீர்கள்.

·         கும்பே நகரம் மிகச்சிறிய ஒரு மலை வாசஸ்தலம் என்பதால் தங்குவதற்கு அத்தனை பெரிய வசதிகள் இல்லை.

·         கும்பே நகரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் உடுப்பி நகரத்திற்கு வந்தால், தங்குவதற்கு வசதியான சொகுசான ஹோட்டல்கள் தொடங்கி பட்ஜெட் லாட்ஜ்கள் வரை பல தங்குமிட வசதிகள் இருக்கின்றன.


No comments:

Post a Comment