Thursday, August 20, 2020

சிறுநீரகம் காக்க 10 கட்டளைகள்!

சிறுநீரகம் காக்க 10 கட்டளைகள்!

ரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்!

             உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சிறுநீரகம் பாதிக்கப்படுவதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடலாம். முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், மாதாமாதம் தங்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்வது அவசியம்

உப்பு - உஷார்!

                 ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மட்டுமே. இதைவிடவும் குறைவான உப்பை எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். உப்பு நிறைந்த உணவுப் பொருள்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம். உப்புக்கண்டம், சோடா தண்ணீர் ஆகியவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகள் ஆகியவற்றில் உப்பு கூடுதலாகவே இருக்கும். இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.

ரத்தச் சர்க்கரை அளவோடு இருக்கட்டும்!

               சர்க்கரை நோயுள்ளவர்கள் ரத்தச் சர்க்கரை அளவைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் இருக்க வேண்டிய சரியான சர்க்கரை அளவு 120 மி.கி./டெசி லிட்டர். ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகச் செயல்பாடு குறித்த பரிசோதனைகளை அவர்கள் செய்துகொள்ள வேண்டும்.

புகை சிறுநீரகத்துக்குப் பகை!

'                    நிகோட்டின்' நச்சு ரத்தக்குழாய்களைச் சுருக்கிவிடும். இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து, சிறுநீரகத்துக்குப் பாதிப்பு ஏற்படும். மேலும், சிறுநீரகப் புற்றுநோயும் சிறுநீர்ப்பைப் புற்றுநோயும் வருவதற்கான வாய்ப்பைப் புகைப்பழக்கம் அதிகப்படுத்தும்.

குடிக்கும் தண்ணீர் முக்கியம்!

        வெப்பப் பிரதேசத்தில் வசிக்கும் நாம் தினசரி 3 – 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் சிறுநீரகத்திலிருந்து யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருள்கள் சீராக வெளியேறும்; சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் இது தடுக்கும். அதேவேளையில் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், மருத்துவர் ஆலோசனைப்படி தண்ணீர் குடிப்பது நல்லது.

சுய மருத்துவம் வேண்டாம்!

          மூட்டுவலி, முதுகுவலி போன்றவற்றுக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரை மருந்துகள், ஸ்டீராய்டு மாத்திரைகள் போன்ற வீரியமுள்ள மருந்துகளை அளவுக்கு மேல் பயன்படுத்துவது சிறுநீரகத்தைப் பாதிக்கும்மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்தவொரு மருந்தையும் நீங்களாகவே வாங்கிச் சாப்பிடாதீர்கள். மாற்று மருத்துவம் என்னும் பெயரில் தகுதியில்லாத மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதைத் தவிருங்கள். காரணம், முறையில்லாமல் தயாரிக்கப்படும் லேகிய மருந்துகளில் அதிக அளவில் உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இந்த உலோகங்கள் சிறுநீரகத்தைப்பாதிக்கக்கூடியவை.

சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது.

             சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால், உடனே கழித்து விட வேண்டும். அப்போது தான் அதிலுள்ள கழிவுகள் உடனுக்குடன் வெளியேறி சிறுநீரகப் பாதை சுத்தமாக இருக்கும். நோய்த்தொற்று ஏற்படாது.  தினமும் குளிக்கும்போது இனப்பெருக்க உறுப்புகளை நன்றாகச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் சிறுநீரகத்தில் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

மது அருந்தாதீர்கள்

     மதுவில் உள்ள பல ரசாயனங்கள் சிறுநீரகத்துக்கு வேட்டுவைக்கும்.

தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்

          எந்த ஓர் உடற்பயிற்சியும் நல்லதுதான். ஆனாலும், நடைப்பயிற்சி தான் எல்லோருக்குமான எளிய பயிற்சி. அடுத்தது, யோகா. தினமும் 6 – 8 மணி நேரம் உறங்கி ஓய்வெடுங்கள்.


No comments:

Post a Comment