Thursday, August 20, 2020

சிறுநீரகப் பிரச்சினைகள்

 சிறுநீரகப் பிரச்சினைகள்

               சிறுநீரகப் பிரச்சினைகள் ஆரம்பத்தி லேயே வெளியில் தெரியாது; பிரச்சினைகள் பெரிதாகி ஆபத்தான கட்டத்துக்கு வந்தபிறகுதான் அவற்றின் அறிகுறிகள் வெளியில் தெரியும். 40 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பரம்பரைரீதியாகச் சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள், சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள், சிறுநீரில் ரத்தம் கலந்து வரும் பிரச்சினை உள்ளவர்கள், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருப்பவர்கள், அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்படுபவர்கள் ஆகியோர் ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகம் தொடர்பானமாஸ்டர் ஹெல்த் செக்கப்செய்து கொள்வதுநல்லது. ரத்தம், சிறுநீர்ப் பரிசோதனை, வயிற்று எக்ஸ்-ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஐவிபி பரிசோதனை (Intravenous pyelogram – IVP), சி.டி. ஸ்கேன்/எம்.ஆர்.. ஸ்கேன் போன்றவை சிறுநீரகச் செயல்பாட்டை அறிய உதவுகின்றன.

சிகிச்சை முறைகள்

           சிறுநீரகப் பாதிப்பை ஆரம்பத்தி லேயே கவனித்துவிட்டால், நோய்க் கான அடிப்படைக் காரணத்தை மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம். ஆனால், சிறுநீரகம் கடுமையாகச் செயலிழந்துவிட்டால் மருந்து சிகிச்சை மட்டும் போதாது; ‘டயாலிசிஸ்’ (Dialysis) என்னும் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சையும்தேவைப்படும். சிலருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை (Kidney Transplantation) செய்ய வேண்டியதும் வரும்.

No comments:

Post a Comment