Thursday, August 20, 2020

சிறுநீரகம் கெடுவது ஏன்?

 

சிறுநீரகம் கெடுவது ஏன்?

             கட்டுப்படாத சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம், புகைபிடிப்பது, மது அருந்துவது, சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடல் பருமன், காசநோய், வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவது, உணவு நச்சுகள், ரத்தத்தில் ஏற்படும் நச்சுத்தொற்று (Septicemia),புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய், உலோகம் கலந்த மூலிகை மருந்துகள் போன்றவற்றால் சிறுநீரகம் கெடுகிறது. இவற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி விட்டால், சிறுநீரகம் அவ்வளவாகப் பாதிக்கப்படாது. தவறினால், சிறுநீரகம் செயலிழப்பதைத் தவிர்க்க முடியாது.

திடீர் சிறுநீரகச் செயலிழப்பு

              வாந்தி, பேதி போன்றவற்றால் உடலில் நீர்ச்சத்து குறைந்து சிறுநீரகத் துக்கு ரத்த ஓட்டம் குறைந்துபோனாலும், மலேரியா, எலிக்காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் உண்டானாலும், பாம்புக்கடி, குளவிக்கடி போன்ற விஷக்கடிகள் ஏற்பட்டாலும், மருந்து ஒவ்வாமை ஆகிவிட்டாலும், கர்ப்பிணி களுக்குஆபத்தான கருச்சிதைவு, அதீத உதிரப்போக்கு போன்ற பிரசவச் சிக்கல்கள் ஏற்பட்டாலும்     சிறுநீரகம் திடீரெனச் செயலிழக்கும்அப்போது  சிறுநீர்  பிரிவது குறையும்முகம்பாதம் வீங்கும்சிலருக்கு உடலில் நீர்கோத்து உடல் முழுவதும் 

வீங்குவதும் உண்டு.

நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு

              கட்டுப்படாமல் நீடிக்கும் நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு, உடல் பருமன் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்ச மாகச் செயலிழக்கும். ஒரு கட்டத்தில் மொத்தமாகவே செயலிழந்துவிடும். இதனால், சிறுநீர் வெளியேறுவது குறைந்து, உடலில் கழிவுகள் தேங்கி பொது ஆரோக்கியம் பாதிக்கப்படும்; உயிருக்கு ஆபத்து நேரும்.

              குறைந்த அளவில் சிறுநீர் பிரிவது, பசி குறைவது, வாந்தி வருவது, சாப்பிட முடியாதது, தூக்கம் இல்லாதது, ரத்தசோகை ஏற்படுவது, உடலில் அரிப்பும் சோர்வும் ஏற்படுவது, முகம்/கைகால்களில் வீக்கம் தோன்றுவது, மூச்சு இளைப்பு உண்டாவது போன்றவை நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பின்அறிகுறிகள்.

No comments:

Post a Comment