இரத்தம்
எப்படி சுத்திகரிக்கப்பட்டு சிறுநீர் உருவாகிறது?
இரத்தத்தை
சுத்திகரிக்கும்பொழுது சிறுநீரகங்கள் தேவையான பொருட்களை எல்லாம் தம்மிடத்தே தங்க
வைத்து விடுகின்றன தேவைக்குத் தகுந்தாற்போல் உபரியான திரவங்களையும், தாதுப்
பொருட்களையும் மற்றும் கழிவுப் பொருட்களையும் நீக்கி விடுகின்றன. சிக்கல் மிகுந்த
இந்த செயல்பாட்டைப்பற்றி அல்லது பேரதிசயம் மிக்க இந்த செயல்பாட்டைப் பற்றி
இப்பொழுது பார்ப்போம்.
*
உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு நிமிடமும் 1200 மி.லி. அளவு இரத்தம் இரு
சிறுநீரகங்களுக்குள் வருகிறது. அவை சுத்திகரிப்புக்காக அங்கு வருகின்றன. இது
இருதயத்திலிருந்து வெளியாகும் இரத்தத்தின் அளவில் 20 சதவீதமாகும். ஆகவே ஒவ்வொரு
நாளும் 1700 லிட்டர் அளவு இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.
*
இந்த சுத்திகரிப்பு சிறு சிறு அளவில் நடந்து கொண்டிருக்கிறது. மிகச்சிறிய அளவான
வடிகட்டிகள் இதைச் செய்கின்றன. அந்த வடிகட்டிகளுக்குப் பெயர் நெஃப்ரான்கள் ஆகும்.
*
ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 1 மில்லியன் நெஃப்ரான்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு
நெஃப்ரானும் க்ளோமெருலஸ்ஸாலும் ட்யூபூல்ஸ்களாலும் ஆக்கப்பட்டிருக்கிறது.
*
இந்த மேற்கண்ட க்ளோமெருலஸ் என்பவை சிறு சிறு வடிகட்டிகள். அவற்றில் மிக மிகச்
சிறிய துளைகள் உண்டு. அவை முறையாகப் பிரித்துப் பிரித்து வடிகட்டும். நீரும் சிறு
பொருட்கலும் எளிதாக அவற்றின் மூலம் பிரிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மிகப் பெரிய
அளவில் உள்ள இரத்தத்தின் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ப்ளேட்டுலட்டுக்கள்,
புரதம் போன்றவை அவற்றின் வழியே செல்ல முடியாது. ஆகவே ஆரோக்கியமுடைய
வயதானவர்களுக்கு பெரிய வடிவில் உள்ள பொருட்களை சிறுநீரில் காண முடியாது.
*
சிறுநீரை சுத்திகரிக்கும் செயலில் முதல் படியானது இந்த க்ளோமெருலஸ்ஸில் நடக்கிறது.
அங்குதான் சுமார் 125 மி.லி. அளவு ஒவ்வொரு நிமிடமும் சிறுநீர் வடிகட்டப்படுகிறது.
24 மணி நேரத்திற்குள் 180 லிட்டர் சிறுநீர் உற்பத்தி செய்து விடப்படுகிறது! இது
ஒரு பேராச்சரியமான செயல்பாடு. அவற்றில் கழிவுப் பொருட்கள் தாதுப் பொருட்கள்
மற்றும் விஷப் பொருட்கள் மட்டுமல்லாமல், க்ளூகோஸ் போன்ற உபயோகமான பொருட்களும்
உள்ளன.
*
சிறுநீரகங்கள் மீண்டும் உடலிலேயே சேர்த்துக் கொள்ளும் வேலையையும் செய்கின்றன. அதை
பெரும் அறிவார்த்தம் நிரம்பிய அக்கறையுடன் செய்கின்றன. ட்யூபூல்ஸ்களை வந்தடையும்
180 லிட்டர் திரவத்தில் 99 சதவீதம் பிரித்துப் பிரித்து வடிகட்டப்படுகின்றன
மீதமுள்ள 1 சதவீத திரவமே சிறுநீருடன் வெளியேற்றப்படுகிறது. இந்த அறிவு மிக்க
செயல்பாட்டினால், எல்லாவிதமான அவசியமான பொருட்களும் 178 லிட்டர் திரவமும்
ட்யூபூல்களினால் உட்கிரகிக்கப்படுகின்றன. இவை எல்லாம் 1 லிருந்து 2 லிட்டர்
நீரிலிருந்து எடுக்கப் படுகின்றன. அவற்றுடன் கழிவு பொருட்களும், உபரியானதாதுப்
பொருட்களும் மற்றும் இதர தீய பொருட்களும் கலந்திருக்கின்றன.
*
சிறுநீரகங்களால் உருவாக்கப்பட்ட சிறுநீரானது, யுரீட்டருக்குள் பாய்கிறது.
சிறுநீர்ப் பை வழியாக இறுதியல் யுரீத்ரா மூலம் உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது.
ஆரோக்கியமான சிறுநீரகங்களை உடைய ஒரு மனிதரின் சிறுநீரின்
கன அளவில் மாறுதல் காணப்படுமா?
ஆமாம். நீரின் உட்கொள்ளப்படும் அளவு மற்றும் காற்றின் வெப்ப நிலை போன்ற அம்சங்கள் அந்த கன அளவைத் தீர்மானிக்கின்றன. உட்கொள்ளப்படும் நீரின் அளவு குறைவாக இருந்தால், சிறுநீர் திண்மை மிக்கதாக இருக்கும். அதன் கன அளவு குறைவாக இருக்கும். (சுமார் 500 மி.லி.) ஆனால் ஒருவர் நிரம்ப நீர் குடித்தால், அல்லது உட்கொள்ளப்பட்டால், உருவாகும் சிறுநீரின் அளவு அதிகமாகும்.
கோடைகாலத்தில்
வியர்வை மிகுதியின் காரணமாக சிறுநீரின் கன அளவு குறையும். குளிர்காலத்தில் அதற்கு
மாறுபட்ட நிலைமை இருக்கும். குறைந்தகாற்று வெப்பநிலை, வியர்வை இல்லாமை போன்ற
காரணத்தால் சிறுநீர் அதிகமாகச்சுரக்கும்.
சிறுநீரகங்களின்
செயல்பாட்டின் பிரதான அம்சமே கழிவுப் பொருட்களையும் தீயவை உருவாக்கும் பொருட்களை
நீக்குவதாகும். உபரியான நீரின் அளவு சிறுநீரில் சேராமல் தடுப்பதாகும்
*
சாதாரண அளவே நீரைப் பருகும் ஒரு நபருக்கு உருவாகும் சிறுநீரின் அளவு 500மி.லி.க்கு
குறைவாக இருந்தால் அல்லது 3000 மிலி.க்கு அதிகமாக இருந்தால் உடனே சிறுநீரகங்களை
பரிசோதிக்க வேண்டும் என்பதற்கு அது அறிகுறியாகும். சிகிச்சை செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment