சிறுநீரகங்களின் அமைப்பு மற்றும் சிறுநீரகங்கள் உடலுக்கு ஏன் தேவை
விஷத்
தன்மை கொண்ட கழிவுப் பொருட்களை நீக்கி சிறுநீரகங்கள், சிறுநீரை உருவாக்குகின்றன.
அப்படி சிறுநீரகங்களில் உருவான சிறுநீரானது யுரீட்டர் எனும் சிறுநீர்க் குழாய்
மூலமாக சிறுநீர்ப் பைகளுக்குச் செல்கிறது. இறுதியில் குழாய் வழியாக
வெளியேற்றப்படுகிறது.
*
மிகப்பெரும்பான்மையோர் (ஆணோ அல்லது பெண்ணோ) இருசிறுநீரகங்களைப்
பெற்றிருக்கின்றனர்.
*
அடிவயிற்றுக்கு சற்று மேலும் முதுகெலும்பின் இரு பக்கங்களுக்கு ஒன்றாக இவை
இருக்கின்றன.
*
சிறுநீரகங்களாவன அடிவயிற்றின் ஆழ்ப்பகுதியில் உள்ளே அமைக்கப்பட்டிருப்பதால்,
சாதாரணமாக அவை இருப்பதை உணர முடியாது.
*
சிறுநீரகங்கள் ஒரு ஜோடி அவரைக் கொட்டைகள் போல இருக்கும். பெரியோர்களுக்கு, ஒரு
சிறுநீரகம் சுமார் 10செ.மி. நீளம் இருக்கும். 6 செ.மி. அகலம் இருக்கும் மற்றும் 4
செ.மி. கனம் இருக்கும். சுமார் 150 லிருந்து 170 கிராம்கள் எடை கொண்டது.
*
சிறுநீரகங்களில் உருவான சிறுநீர், சிறுநீர்ப்பையை குழாய்கள் மூலம் சென்று
அடைகிறது. அந்தக் குழாய் சுமார் 25 செ.மி. நீளமுடைய ஒன்றாகும். அதன்வழியாகவே
சிறுநீர்செல்கிறது. தனிச்சிறப்பு குணமுடைய தசைகளால் அவை உருவானவை.
*
சிறுநீர்ப் பையானது ஒரு வெற்றிடமாக இருக்கும். அங்கம் தசைகளால் ஆனது அடிவயிற்றுக்கு கீழும்
பின்புறமும் அமைந்திருக்கின்றன.
*
வயதானவர்களுக்கு இந்த சிறுநீர்ப் பையானது சுமார் 400 லிருந்து 500 மி.லி. வரை
சிறுநீரைச் சேகரித்து வைக்கும். அந்தப் பை நிரம்பியவுடன், சம்பந்தப் பட்டவருக்கு
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
*
சிறுநீர் அந்தயுரீத்ரா எனும் குழாய்கள் வழியே வெளிவருகிறது. பெண்களுக்கு இந்த
குழாய் சற்று சிறியதாக இருக்கும். ஆண்களுக்கு அதைவிட நீளமாக இருக்கும்.
*
ஒவ்வொரு நாளும் நாம் வித விதமான உணவு வகைகளை உண்பது மட்டுமல்லாமல், வெவ்வேறு அளவு
உண்கிறோம்.
*
நாம் எடுத்துக் கொள்ளும் நீரின் அளவு, உப்புக்களின் அளவு மற்றும் அமிலங்களின்
அளவுகளும் அன்றாடம் வேறுபட்டுக் கொண்டிருக்கின்றன.
*
தொடர்ச்சியாக இடைவிடாது உணவுப் பொருளை சக்தியாக மாற்றும் பணியானது விஷத்தன்மை
கொண்டபொருட்களை அனவரதமும் உற்பத்தி செய்தவண்ணம் இருக்கிறது.
*
இந்த செயல்பாடுகள் எல்லாமாகச்சேர்ந்து, உடலில் இருக்கும் திரவத்தின் அளவையும்,
மின்சாரம் பாயும் திரவ ஊடகங்களின் அளவையும் அமிலங்களின் அளவையும் மாற்றிக்கொண்டே
இருக்கிறது. தேவையற்ற கழிவுப்பொருட்கள் கொண்டுவரும் விஷத்தன்மை சில சமயங்களில்
எல்லையற்றுப்போகலாம்.
*
சிறுநீரகங்கள் உடலிலிருந்து விஷம் தங்கியுள்ள அமிலங்களையும் தீய திரவங்களையும்
அகற்றுகின்றன. அவை செய்யும் மிக மிக முக்கியமான சுத்திகரிப்பு தொழில் இதுவாகும்.
அதே சமயத்தில் உடலில் இருக்கும் நீரின் அளவை சமநிலைப்படுத்துகிறது. அதே சமயத்தில்
மின்சாரம் பாயும் திரவங்களையும், அமிலங்களின் அளவையும் சமநிலைப் படுத்திக் கொண்டே
செல்கிறது.
No comments:
Post a Comment