சிறுநீரகங்களின் செயல்பாடுகள் என்ன?
சிறுநீரகங்களின்
மிக முக்கியமான செயல்பாடு சிறுநீரை உருவாக்கி இரத்தத்தை சுத்திகரிப்பதாகும் அவை
கழிவுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுகின்றன. உபரியாகவும் வீண்
பொருட்களாகவும் உடலில் தங்கி விடும் உப்புக்கலையும் இதர இரசாயனங்களையும் அவை
வெளியேற்றி விடுகின்றன. சிறுநீரகங்களின் முக்கியமான வேலைகள் கீழ்க்கண்ட வகையில்
சித்தரிக்கப்படுகின்றன
கழிவுப் பொருட்களை அகற்றுதல்
சிறுநீரகங்களின்
மிக முக்கியமான வேலையானது உடலுக்குள் சேரும் கழிவுப் பொருட்களை அகற்றி இரத்தத்தை
சுத்தப்படுத்துவது ஆகும். நாம் உண்ணும் உணவில் புரதச்சத்து இருக்கிறது. புரதமானது
உடல் வளர்ச்சிக்கும் உடலை அவ்வப்போது புதுப்பிக்கவும் தேவைப்படுகிறது. ஆனால்
அப்படி புரதத்தை உடல் உட்கிரகித்துக் கொள்ளும்பொழுது, கழிவுப் பொருட்களை உருவாக்கி
விடுகிறது. இந்த கழிவுப்பொருட்கள் உடலில் சேரச்சேர விஷத்தன்மை கூடுகிறது.
சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டி கழிவுப் பொருட்களையும் வடிகட்டி சிறுநீருடன்
வெளியேற்றி விடுகிறது.
கிரியட்டினைனும்
யூரியா எனும் இரு உப்புக்களும் கழிவுப் பொருட்களிலேயே மிக முக்கியமானவை. அவை
உடலில் இருக்கும் அளவை எளிதாக அளந்து விடலாம். இரத்தத்தில் அவை இருக்கும் அளவே
சிறுநீரகங்களின் வேலைத் திறனைக் காட்டுகிறது. இரு சிறுநீரகங்களும்
பழுதாகிவிடும்பொழுது, இரத்தத்தில் இருக்கும் மேற்கண்ட இரு உப்புக்களின் அளவு மிக
அதிகமாகி விடுகிறது
உபரியான தேவையற்ற திரவங்களை வெளியேற்றுவது
சிறுநீரகங்களின்
இரண்டாவது முக்கிய செயல்பாடு உடலில் தேவையற்று உபரியாகத் தங்கி விடும் நீரை
சிறுநீராக மாற்றி வெளியேற்றுவது ஆகும். தேவையான அளவே உடலில் நீரை வைத்துக் கொள்ள
உதவுவதாகும். இப்படித்தான் நீரின் சமநிலையை சிறுநீரகங்கள் பாதுகாத்துவருகின்றன.
சிறுநீரகங்கள்
பழுதடைந்து விடும்பொழுது, அவையால் உபரியான நீரை வெளியேற்ற முடிவதில்லை. அப்படியே
உடலிலேயே தங்கி விடும் நீரானது உடலை வீங்கச்செய்துவிடுகிறது.
சமநிலைக்கு மேல் இருக்கும் தாதுப்பொருட்களும் இரசாயனப்
பொருட்களும்
சமநிலைக்கு
மேல் இருக்கும் தாதுப்பொருட்களும் இரசாயனப் பொருட்களும் உடலிலேயே தங்கிவிடும்.
சிறுநீரகங்கள் செய்யும் இன்னொரு முக்கியமான செயல்பாடு என்னவென்றால், உடலில்
தங்கிவிடும் தாதுப் பொருட்கள், அதாவது பொட்டாசியம், ஹைட்ரஜன், ஃபாஸ்பரஸ் போன்ற
தாதுப் பொருட்களை அகற்றுவதாகும். அப்படி அகற்றி உடலில் உள்ள திரவங்களின் அளவை
சீராக்கிக் கொண்டே இருக்கிறது.
உடலில்
இருக்கும் சோடியத்தின் அளவு மாறினால், நினைவுநிலை பாதிக்கும். பொட்டாசியத்தின்
அளவு மாறினால் இதயம் துடிக்கும் வேகத்தில் மாறுதலைக் கொண்டு வரும் மற்றும்
தசைகளின் இயக்கங்களிலும் வேறுபாடுகளைக் கொண்டு வரும். கால்வியம் மற்றும்
ஃபாஸ்பரத்தின் சரியான அளவுகள் வைக்கப்படுதல் உடலின் ஆரோக்கியத்திற்கும், எலும்பு
மற்றும் பற்களின் ஆரோக்கிய நிலைக்கு அவசியம்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்
சிறுநீரகங்களின்
வித விதமான ஹார்மோன்கள் GarriGstsipsar. (renin, angiotensin, aldosterone,
prostaglandin) உடலில் இருக்கும் நீரின் அளவையும் உப்பின் அளவையும் கட்டுப்
படுத்துகின்றன. இந்த செயல்பாடுதான் உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்
படுத்துவதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இவற்றின் சமநிலை மாறினால், உடலின்
இரத்த அழுத்தம் கூடுகிறது.
இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்தல்
எரித்ரோபோய்டின்
எனும் வளரூக்கி இயக்குநீர் (Hormone) சிறுநீரகங்களில் உற்பத்தி செய்யப் படுகிறது.
அது இரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய தூண்டுகின்றன.
சிறுநீரகங்கள் பழுதடையும்பொழுது மேற்கண்ட பொருளின் உற்பத்திக்கும் பங்கம்
ஏற்படுகிறது. அதுவே இரத்தத்தில் உள்ள ஹீமோக்ளோபின் அளவை பாதித்துக் குறைக்கிறது.
அப்படிப்பட்ட குறைவான உற்பத்தியால், ஹீமோக்ளோபினின் அளவு கூடுவதே இல்லை.
எவ்வளவுதான் இரும்புச் சத்தும் விட்டமின்களும் உள்ள மருந்துகளைச் சாப்பிட்டாலும்
ஹீமோக்ளோபினின் அளவு கூடுவதில்லை.
ஆரோக்கியம் மிகுந்த எலும்புகளை உருவாக்குதல்
சிறுநீரகங்கள்
விட்டமின் டி-யை அதன் செயல்மிக்க வடிவில் மாற்றித் தருகிறது. அதுவே உணவில்
இருக்கும் கால்வியத்தை உட்கிரகிக்க உதவுகிறது. எலும்பின் வளர்ச்சியைக்
கண்காணிக்கிறது. பற்களின் வளர்ச்சியைக் கண்காணித்து பற்களை ஆரோக்கியமாக இருக்க
வைக்கிறது. விட்டமின் டி குறைந்து சிறுநீரகங்கள் பழுதடைந்தால், எலும்புகளின்
வளர்ச்சியும் குன்றுகிறது. அவை நலிவடைந்து விடுகின்றன. சிறுவர்களுக்கு ஏற்படும்
வளர்ச்சி பின் தங்கி விடுதலே சிறுநீரகங்களின் பழுதின் அறிகுறியாகும்.
No comments:
Post a Comment