ஊத்துக்குளி வெண்ணெய்…
·
ஒவ்வொரு பகுதியில் உள்ள மண்ணுக்கும் ஒரு சிறப்புண்டு; அத்தகைய சிறப்பு பெற்றது
·
அப்பகுதியில், எருமைப்பால் மூலம் தயா ரிக்கப்படும் வெண்ணெய்க்கு, நாடு முழுக்க கிராக்கி. சுவை, மணம், அதிகளவு கெட்டித்தன்மை நிறைந்தது என்பது தான் இதன் சிறப்பு.
·
உள்ளூர் மக்களின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கிய வெண்ணெய் தயாரிப்பில், 50க்கும் மேற்பட்ட பெரிய,
100க்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்கள் உள்ளன.
·
மார்க்கெட்களில், பலவகையான வெண்ணை வகைகள் கிடைத்தாலும் இந்த வெண்ணை தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் பளபளப்பு தன்மை புளிப்பு சுவை ஆகிய காரணிகளால் ஊத்துக்குளி வெண்ணெய் பிற வெண்ணைகளிலிருந்து மாறுபடுகிறது.
·
இதற்கான காரணம் அங்குள்ள மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் தரத்தை பொறுத்து அமைகிறது
·
கால்நடைகளை வளர்ப்பவர்கள், தங்கள் கால்நடைகளுக்கு பருத்தி விதை மற்றும் கொழுக்கட்டைப்புல் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த தீவனங்களைக் கொடுத்து வளர்க்கின்றனர். இதன் விளைவாக பால் அதிக கொழுப்பு மட்டுமல்லாமல், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளதாக இருக்கும்
·
ஊத்துக்குளியில் கால்நடைகள் உள்ள வீடுகளில் இருந்து, அதிகப்படியான பால் கிடைக்கும். அதன் பிறகு அவர்கள் அந்த பாலை சூடாக்கி, தயிர் சேர்த்து, மண் பானைகளில் உறைய வைப்பார்கள்.
·
குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒரு தயிர் பானையாவது ஊத்துக்குளியில் வைத்திருப்பார்கள். இதனை அவர்கள் பாரம்பரியமாக கருதுகிறார்கள்.
·
மேலும் வீட்டில் உள்ள இல்லத்தரசிகள், இந்த தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுப்பார்கள்.
·
இது தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்பட்ட பாரம்பரியம் ஆகும்.
·
ஊத்துக்குளி வெண்ணெய் இவ்வளவு பிரபலமாக இருப்பதற்கு மற்றொரு காரணம் அந்த நகரத்தில் இருக்கும் ரயில் நிலையம். பல்வேறு இடங்களுக்கு வெண்ணெய் திறம்பட செல்ல வசதியாக உள்ளது.
·
1950 ஆம் ஆண்டு முதல் ஊத்துக்குளி வெண்ணெய் ஒரு சமையல் பொக்கிஷமாக இருந்து வருகிறது.
·
ஊத்துக்குளியில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக வெண்ணெய் மற்றும் நெய் தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment