சிறுதனத்து வடுகர்
சோழர் படையில் சிறுதனத்து வடுகர் என்ற பிரவு இருந்துள்ளது.
சிறுதனம் என்ற சொல்லுக்கு சேமிப்பு, சொந்த செலவில் உருவாக்குவது என்று பெயர். "உடையார்ஸ்ரீ ராஜராஜ தேவர் சிறுதனத்துக் கொடுத்த" என்பது சோழரின் சொந்த பணத்தில் (Private Fund) இருந்து கொடுத்த தொகை என்பது பொருள்.
சில அறிஞர்கள் சிறுதனம் எனறால் குறைவான பணமுடைய வணிகர், பெருதனம் என்றால் பெரும் வணிகர் என்றும் கூறுவர். பாவாணர், ". பெண்டிர்க்குச் சொந்தமாகவுள்ள சிறு செல்வத்திற்கு அல்லது செல்வத்திற்குச் "சிறுபாடு" (சிறுவாட்டு காசு) என்றும் சிறுதனம் என்றும் பெயர் . சிறுதனம் என்பது ‘ ஸ்ரீ தனம் சீதனம் எனத் தவறாக வழங்குகின்றது" என்கிறார். சிலப்பதிகாரம் இருபெருவீதி - சிறுதனம் பெருந்தனம் பெறுவார்வீதி எனக் கூறுகிறது.
ஆனால் ஆட்சி அமைப்பில் சிறுதனம், பெருந்தனம் என்றால் அவை சிறுதரம், பெருந்தரம் என்ற அதிகாரிகளை குறித்துள்ளது. பெருந்தரம் பெரிய அதிகாரிகள் என்றும், சிறுதரம் என்பது சிறிய அதிகாரிகளை குறித்துள்ளது.
சோழர் காலத்தில் பரிவாரத்தார், அகப்பரிவாரத்தார், கைக்கோளர், நியாயத்தார், சிறுதனம், பெருந்தனம் என்னும் பல நிலைகளில் இராணுவத்தினர் பணியாற்றியதை காணமுடிகிறது. வேளைக்காரர்கள் என்ற அமைப்பில் வலங்கை, இடங்கை, சிறுதனம், பிள்ளைகள்தனம், வடுகர், மலையாளர், பரிவாரக் கொந்தம் அகிய பிரிவுகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
கங்கை கொண்ட சோழபுரம் அரண்மனையில் சிறுதனம் பிரிவிலிருந்த மேற்கா நாட்டுக் கைக்கோளர்கள் பயன்படுத்திக் கொள்வதற் காகக் குலோத்துங்க சோழ நல்லூர் என்ற கிராமத்திலுள்ள சாகுபடி நிலம் வீரபோகமாகக் கொடுக்கப்பட்டது.
சோழ நாட்டின் அதிகாரிப் பெயர்களைச் சிறுதரம், பெருந்தரம் என்னும் இருவகைப் படுத்தலாம். கல்வெட்டுகளில் இவ் வடிவங்கள் சிறுதனம், பெருந்தனம் என்றும் காணப்படுகின்றன. அடை யாள், அடைப்பக்காரன், பணிமகன், அமஞ்சி, ஊர்க் காவல் எச்சில் மண்டலம், கழ் முக வெட்டி, கோயிற் கொத்து, மடப்பள்ளிப் பெண்டிர், சண்டை கொட்டு வோர், திருவேலைக் காவல், தழையிடுவார் என்பன போன்றோர் சிறுதரமாய்ப் பதவி வகித்தவர்களாவார்.
உண்ணாழிகைப் பெருமக்கள், உதாசனப் பெரு மக்கள், அமிர்த கனத்தார், உள்ளூர்ப் பண்டாரம், ஓலைநாயகம், காவிதி, ஞானப் பெருமக்கள், நடுவிருக்கை, நாட்டாமை, மன்றாடி, மாணிக்கப்பண்டா ரத்தார், பிள்ளையார், மூலபருடையோர், வாரிகள் முதலியோர் பெருந்தரமாய்ப் பணியாற்றியவர்களாவர்.
அரசவையில் இடம் பெற்ற பெருந்தர அலுவலருள் அமரம், ஆளுங்கணத்தார், உடன் கூட்டம், உடை. யார், உள்ளூர்ப் பண்டாரம், முகவெட்டி திருவாய்க் கேள்வி, வைத்திய புரந்தரன், ஓலை நாயகன், மகா சபைப் பெருமக்கள், மாணிக்கப் பண்டாரத்தார், மேற். பாடி காவல், மெய்க் காப்பாளர், வாரிகள் விடையில திகாரிகள் முதலியோர் மிகவும் குறிப்பிடத் தக்கவர்களாவார்.
அமரம், சிற்றரசு பதவியைக் குறிக்க வருவதாகும். கல்வெட்டுகளில் இப் பதவிப் பெயர் அமர நாயகம், அமரப் பதவி என்றும் வருகிறது. ஆளுங்கணத்தார் என்னும் பெயர் நிருவாக மேற்பார்வையிடுவோர் களைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. அரசவை வகுத்த வாரியங்களிலும் கோயில் நிருவாகத்திலும் கிராம சபையிலும் இத்தகைய ஆளுங்கணத்தார் இடம் பெற்றிருந்தார்.
தஞ்சாவூர் கல்வெட்டுகள் வழி சோழ மகாலிங்கம் குறிப்பிடுகிறார். அவற்றில்
1. பெருந்தனத்து ஆனையாட்கள்.
2. பண்டித சோழத் தெரிந்த வில்லிகள்.
3. உத்தம சோழத் தெரிந்த அந்தகளத்தார்.
4. நிகரிலிச்சோழத் தெரிந்த உடநிலைக்குதிரைச் சேவகர்
5. மும்முடி சோழத் தெரிந்த ஆனைப்பாகர்.
6. வீரசோழ அணுக்கர்.
7. பரந்தக கொங்கள்வார்.
8. மும்முடி சோழத் தெரிந்த பரிவாரத்தார்.
9. கேரளாந்தகத் தெரிந்த பரிவாரத்தார்.
10. சிங்களாந்தக தெரிந்த பரிவாரத்தார்.
11. சிறுதனத்து வடுகக் காவலர்.
12. வலங்கைப் பெருப்படைகளிலார்.
18. பெருந்தனத்து வலங்கை வேளைக்காரப்படைகள்.
14. அழகிய சோழத் தெரிந்த வேளைக்காரர்.
15. அரிதுர்க்க லங்கானத் தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
16. சண்ட பராக்கிரமத் தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
17. இளைய இராஜராஜ தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
18. சத்திரிய சிகாமணி தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
19. மூர்த்த விக்ரமா பரணத் தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
20. நித்திய விநோத தெரிந்த வலங்கை வேலைக்காரர்.
21. இராஜ கந்திரவ (Raja Kanthirava) தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
22. இராஜராஜ தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
23. இராஜ விநோத தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
24. விக்ரமா பராணத் தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
25. கேரளாந்தக வாசல் திருமெய்க்காப்பார்.
26. அணுக்க வாசல் திருமெய்க்காப்பார்.
27. பரிவார மெய்க்காப்பார்கள்.
28. பலவகைப்பெரும் படைகளிலார்.
29. மூலபரிவார விட்டேரு என்ற ஜனநாத தெரிந்த படை ஆகிய சோழப் படைகள் இருந்துள்ளன.
ஒரு நாட்டு அரசாங்கம் நடைபெறத் தெளிவான இலாக்காக்கள் இருத்தல் வேண்டும். அவற்றில் வேலை பார்க்க உயர் அலுவலர்களும் எழுத்தார்களும் இருப்பது இயல்பு, அவ்வலுவலரும் சோழர் கல்வெட்டுக்களில் கருமிகள், பெருந்தரம் அல்லது பெருந்தனம் என்றும், பணி மக்கள், சிறுதரம் அல்லது சிறுதனம் என்றும் அழைக்கப் பட்டனர். சிறுதனத்துப் பணிமக்கள், சிறுதனத்து வலங்கை வேளைக்காரப்படைகள், பெருந்தனத்துச் சேனாதிபதி ஸ்ரீ கிருஷ்ணன்ராமன், பெருந்தரம் திருமலை வெண்காடன், பெருந்தனத்து ஆனை ஆட்கள், பெருந்தனதிற்கு. வலங்கை வேளைக்காரப் படைகள். என்பன போன்ற தொடர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.
"தனம்” என்பதும் "தரம்'" என்பதும் ஒரே பொருளைத் தரும் சொற்கள் ஆதலால், சேனாதிபதி போன்ற உயர்தர அலுவலர் "பெருந்தரம்” என்றும், அடுத்து வேலை பார்ப்பவர் “சிறுதரம்” என்றும் அரசாங்க முறையில் அழைக்கப்பட்டனர். என்று கொள்வதே பொருக்தமஈகும். பெருந்தரத்தைச் சோர்ந்த உயர் அலுவலர் "கருமிகள்” என்றும் அமைக்கப்பட்டனர்; சிறுதரத்தைச் சேர்ந்தவர் கள் "பணிமக்கள்" என்றும் அழைக்கப்பட்டனர். இவ்விருவகைக்கும் இடைப்பட்ட அலுவலர் சிறுதனத்துப் பெருந்தனம் என்று அழைக்கப்பட்டனர் என்று கொள்ளலாம்."
சிறுதனத்து பெருந்தரம் என்போர் வணிகரில் இருந்து அரசியல் அதிகாரியாகவோ, படை அதிகாரியாகவோ இருந்தவர் எனக் கருத இடமுள்ளது.
கல்வெட்டு அருஞ்சொற் பொருள்,
சிறுதனம் : (அ) சோழர் ஆட்சியில் இடம்பெற்ற அரசியல் அதிகாரி களில் ஒரு தகுதியினர். முதல் இராசராசன் காலத்தில் அமைந்த அரசியல் சுற்றக்குழுவினுள் சிறந்த இடம் பெற்றிருந்தனர். நாட்டில் நிலையாக வரும் பெருஞ் செல்வருள் இரண்டாவது தரத்தினரே "சிறுதனம்" என்று குறிக்கப்பெற்றனர் . என உறைக்கிறது.
"உடையார் ஸ்ரீராஜராஜதேவர். சிறுதனத்தும் பெருந்தனம் கேரவன் அண்ணாமலையான கேரளாந்தக விழுப்பரையன்”
இராஜராஜன் படைப்பிரிவில் இருந்த சிறுதன வடுகர் அரசரின் சொந்த நிதியில் இயங்கிய காவல் வடுகராக இருக்கலாம். அல்லது சிறுதர அதிகாரியின் கீழ் செயல்பட்ட வடுகர் படையாக இருக்கலாம். இருப்பினும் சங்க காலம் தொட்டே வடுகர் காவல் வீரர் என்பதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.
இலங்கையில் வலங்கை வேளக்காரப் படையில் "தனம் வடுகர்" என்பார் இருந்துள்ளனர் என்பதை விஜயபாகுவின் ஆட்சிக்கால, வேளைக்காரர் கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது. இவர்கள் வடுக வணிக வீரர்களாக இருக்கலாம்.
No comments:
Post a Comment