Saturday, May 9, 2026

அன்னாசி

அன்னாசி 



·         நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை ஆகாய கங்கை அருவிஅரப்பளீஸ்வரர் கோயில், மூலிகைத் தோட்டங்கள் மற்றும் இயற்கை வியூ பாயிண்ட்கள் மட்டுமல்லாது அன்னாசி பழத்திற்கும் பெயர் பெற்றது.

·         அன்னாசி வறட்சியிலும் வளரக்கூடியது .

·         மலைச் சரிவுகளில் சாகுபடி செய்யப்படுகிறது.

·         இம் மலைப் பகுதி அபூர்வமான மருத்துவ மூலிகைகளுக்கு பெயர் பெற்றது.

·         கொல்லிமலை அன்னாசி குறைந்த அளவு பராமரிப்பு மற்றும் ரசாயன உரங்கள் இன்றி, இயற்கையான முறையில் வளர்க்கப்படுவதால் தனித்துவமான சுவை கொண்டது.

·         மலை மண் மற்றும் செம்மண்ணில், குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்யப்படுகிறது. நடவு செய்த ஒருமுறை பல வருடங்களுக்கு மகசூல் தரும்.

·         ஜூன், ஜூலை மாதங்களில் சீசன் உச்சத்தில் இருக்கும்.

·         பழத்தின் அளவிற்குத் தகுந்தார் போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

·         தமிழகம் மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளுக்கு, கொல்லிமலையிலிருந்து நேரடியாக விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

·         கொல்லிமலை அன்னாசி, அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்திற்காக மிகவும் பிரபலம், இதனால் இப்பழங்கள் சந்தையில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment