வெள்ளாட்டுக் கறி - செம்மறியாட்டுக் கறி எது சாப்பிடலாம்…
செம்மறி ஆட்டில் ஃபேட் 20-25 கிராம் உள்ளது. எல்லாருக்கும் இருக்கும் பயம், ஃபேட் அதிகமானால், கொழுப்பு அதிகரிக்கும் என்பது தான்.
·
இந்தியா முழுவதும் ஆட்டு இறைச்சி பரவலாக சாப்பிடப்பட்டு வருகிறது. சிலர் வெள்ளாட்டு கறியை விரும்புகின்றனர். சிலர் செம்மறி ஆட்டு கறியை விரும்புகின்றனர்.
·
வெள்ளாட்டு கறி, வெள்ளை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். செம்மறி ஆட்டு கறி சிவப்பு நிறத்தில் காணப்படும்.
·
செம்மறி ஆட்டை பொருத்தவரை 100 கிராமிற்கு 300 கேலரிகளும், ஃபேட் 20 கிராம், புரோட்டின் 25 கிராம், கொழுப்பு 100 மி.கி., இருக்கிறது.
·
அதுவே வெள்ளாட்டில் 100 கிராமில் 130 கேலரிகள் தான் உள்ளது. ஃபேர் 3 கிராம், புரோட்டின் 27 கிராம் தான் உள்ளது.
செம்மறி ஆடா? வெள்ளாடா? என்று பார்த்தால், ஆரோக்கியமானது இந்தியன் ஆடு என்று அழைக்கப்படும் வெள்ளாடு தான்.
·
ஆனால் நியூட்ரீசியன் என்று பார்த்தால், அயன், ஃஜிங், மெக்னீசியம், விட்டமின் பி12 ஆகியவை இரண்டிலும் சரிசமமாக உள்ளது. கேலரிகளில் தான் இரண்டும் வேறுபடுகின்றன.
· இது ஆரோக்கியமா என்பதை, உங்களை நோக்கி மூன்று கேள்விகளை நீங்கள் கேட்க வேண்டும்
இந்த கறியை எப்படி சமைக்கலாம்:
·
நிறைய எண்ணெய் போட்டு சமைக்கிறேன் என்றால், அதிக வெப்பத்தில் சமைக்கிறேன் என்றால், ஆரோக்கியம் தரும் புரோட்டின், கேலரிகள் உங்களுக்கு ஆரோக்கியமற்றதாக மாறிவிடும்.
·
குறைவான எண்ணெய்யின் சமைத்தால் அதன் நியூட்ரிசன் உங்களுக்கு ஆரோக்கியம் தரும்.
வாரத்திற்கு எத்தனை முறை உண்கிறோம்:
· இது ஒரு சிவப்பு இறைச்சி. வாரத்திற்கு ஒரு நாளோ, இரண்டு நாளோ, சரியான அளவில் சாப்பிட்டால் பிரச்னை இல்லை
இறைச்சியோடு எதை சேர்த்து சாப்பிடுகிறோம்:
·
அசைவம் சாப்பிடும் போது ஃபைபர் கட்டாயம் சேர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகளில் ஃபைபர் உள்ளது. ஆண்களுக்கு 40 கிராம் ஃபைபரும், பெண்களுக்கு 30 கிராமும் எடுத்தே ஆக வேண்டும்.
மட்டன் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வருமா?
·
செம்மறி ஆட்டில் ஃபேட் 20-25 கிராம் உள்ளது. எல்லாருக்கும் இருக்கும் பயம், ஃபேட் அதிகமானால், கொழுப்பு அதிகரிக்கும் என்பது தான். கொழுப்பு இதில் பிரச்னை இல்லை.
·
செம்மறி, வெள்ளாடு இரண்டிலும் இருக்கும் கொலஸ்ட்ரால் குறைவு தான், ஃபேட் தான் அதிகம். ஃபேட் குறைவாக சாப்பிட்டால், கொழுப்பு பிரச்னை வராது.
·
இதய ஆரோக்கியத்திற்கு, எவ்வளவு சாப்பிடுகிறீர்கள்? எப்படி சமைக்கிறீர்கள்? என்பது தான் முக்கியம்.
·
மட்டனுடன் தோல் இருக்கும் காய்கறிகளை உடன் சமைத்தால் அது உங்களுக்கு குறைவான கொழுப்பு பிரச்னை ஏற்படுத்தும்.
வெள்ளாடுகளுக்கும் செம்மறியாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்
·
வெள்ளாடுகள் நீண்ட கால்களுடனும், மெலிந்த உடலுடனும் உயரமாகக் காணப்படும். ஆனால் பொதுவாக செம்மறி ஆடுகள் குட்டையான கால்களுடனும், தடித்த உடலமைப்புடனும் இருக்கும்
·
செம்மறிக் கடாக்களுக்கு வெள்ளாட்டுக் கடா போன்று கெட்ட நாற்றம் இருக்காது
·
வெள்ளாடுகளுக்குத் தாடி இருக்கும். செம்மறி ஆடுகளுக்கு இருக்காது
·
வெள்ளாடுகளின் வால் தூக்கி இருக்கும். செம்மறி ஆடுகளின் வால் தொங்கிக் கொண்டு இருக்கும்
·
வெள்ளாடுகள் நிமிர்ந்து நடந்து செல்லும். செம்மறி ஆடுகள் குனிந்து செல்லும்
·
செம்மறி ஆடுகளுக்குப் பக்க வாட்டில் திருகிய கொம்புகள் உள்ளன. வெள்ளாடுகளுக்கு நேரான அல்லது பின்னோக்கி வளைந்த கொம்புகள் உள்ளன.
வெள்ளாட்டு கறியோ, செம்மறி ஆட்டு கறியோ எது வாங்கினாலும் கொழுப்பை நீக்கிவிட்டு வாங்குங்கள். இப்படி செய்தால் உடம்பில் கொழுப்பு அதிகம் சேராது.
சிறு பிள்ளைகளுக்கு எந்த கறியாக இருந்தாலும் ஆட்டின் நெஞ்சு கறி, நெஞ்சிற்கு பின் பகுதியில் உள்ள கறி, கழுத்து கறி கொடுக்கலாம்.

.jpg)
No comments:
Post a Comment