மேகாலயாவுல இருக்கிற மௌசின்ராம்
உலகத்துலயே அதிக மழை பெய்யுற ஊர் எது?" நாமளும் யோசிக்காம "சிரபுஞ்சி"ன்னு சத்தமா சொல்லுவோம்.
எவ்வளவு மழை தெரியுமா? வருசத்துக்கு சராசரியா 11,872 மில்லிமீட்டர்! நம்ம ஊர்ல ஒரு வருசம் முழுக்க பெய்ய வேண்டிய மழையை, அவங்க ரெண்டு மூணு வாரத்துலேயே பாத்துடுவாங்க. 2022-ல ஒரே நாள்ல 1000 மில்லிமீட்டருக்கு மேல பேஞ்சு கின்னஸ் புக்குல கூட இடம் பிடிச்சிருக்கு இந்த ஊர். இவ்வளவு மழைல மக்கள் எப்படித்தான் வாழுறாங்கனு தோணுதுல்ல?
அங்க இருக்கிறவங்க மழைக்காகவே ஒரு ஸ்பெஷல் குடையை வச்சிருக்காங்க. பேரு "க்னூப்". மூங்கிலும், வாழை இலை மாதிரி பெரிய இலைக ளையும் வச்சு ஆமை ஓடு மாதிரி செஞ்சிருப்பாங்க. அதை தலை யில போட்டுகிட்டா ரெண்டு கையும் சும்மா இருக்கும், வயல் வேலையை ஈஸியா பாத்துக்க லாம்.
அதே மாதிரி, நாள் முழுக்க டம டமனு இடி சத்தம், சோனு மழை சத்தம் கேட்டுகிட்டே இருக்கும். அதனால வீட்டு கூரை மேல அடர்த்தியான புல்லை பரப்பி வச்சிருவாங்க. அது இயற்கை யாவே வீட்டுக்குள்ள சத்தம் கேட்காம பாதுகாக்குமாம். என்ன ஒரு அறிவு பாருங்க!
வங்காள விரிகுடாவுல இருந்து வர்ற குளுகுளு காத்து, காசி மலை மேல மோதி அப்படியே மொத்த மழையையும் இந்த ஒரு இடத்துல மட்டும் கொட்டிடுது. இதுதான் இயற்கையோட அதிசயம்.
யோசிச்சு பாருங்க, இந்த மாதிரி நிக்காம பெய்யுற மழையில ஒரு மாசம் இருக்க சொன்னா, உங்களுக்கு அது சொர்க்கமா இருக்குமா? இல்ல "அய்யோ வெயிலே பரவாயில்லை"னு தோணுமா?
No comments:
Post a Comment