ராமேஸ்வரம் ஒரு தீவு
ராமேஸ்வரம் ஒரு தீவு....அங்கே மலைகளோ,குன்றுகளோ கிடையாது. அதனால் கருங்கற்களும் கிடையாது வெறும் கடற்கரை..
ஒரு தீவில், அதுவும் மணல் மட்டுமே நிறைந்த மணற்ப்பரப்பில் பல்லாயிரம் டன் எடையுள்ள கருங்கற்களை கொண்டு ஒரு பிரம்மாண்ட மலையே எழுப்பி கட்டி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
கிட்டத்தட்ட 800 வருடங்கள் உழைப்பில் உருவானது இந்த ஆலயம்..
பன்னிரண்டாம் நூற்றாண்டில் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டு வரை..
ராமேஸ்வரம் கோவிலைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட கருங்கற்கள் அனைத்தும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவை.
அந்தக் காலத்தில் 20 முதல் 30 டன் எடையுள்ள கற்களை ஏற்றிச் செல்லவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெரிய மரத் தோணிகளைப் பயன்படுத்தினார்கள். இவை அகலமான அடிப்பகுதியைக் கொண்டவை.
ஒரு பெரிய கல் தூணை ஒரு படகில் ஏற்றுவதற்குப் பதிலாக, இரண்டு அல்லது மூன்று பெரிய படகுகளை ஒன்றாக இணைத்து, அதன் மேல் ஒரு வலுவான மர மேடையை அமைப்பார்கள்.
இதனால் பாரம் சமமாகப் பிரிக்கப்பட்டு, படகு கவிழாமல் மிதக்கும். இதை இன்று நாம் "பாண்டூன்" (Pontoon) என்று அழைக்கிறோம்.
அடுத்து.......இரண்டு பெரிய படகுகளை இணைத்து, நடுவே அந்தப் பிரம்மாண்ட தூணைக் கட்டித் தொங்கவிட்டனர். தண்ணீருக்குள் கல்லின் எடை குறைவு என்ற 'மிதப்பு விசை' தத்துவத்தைப் பயன்படுத்தி, கடலின் ஆழமான பாதைகளில் அந்தப் பாரத்தைச் சுமந்து வந்தனர்.
தரை தட்டாமல் இருக்க, நிலவு மற்றும் ஓதங்களின் (Tides) நேரத்தைக் கணித்து கடல் மட்டம் உயரும்போது படகுகளை நகர்த்தினார்கள்
