ரயில் நிலையத்தின் பெயர் பலகைகள் ஏன் பொதுவாக மஞ்சள் நிறத்திலேயே இருக்கின்றன?
ரயில் பயணங்கள் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை. அலுங்காமல்,
குலுங்காமல் சொகுசாக செல்லும் மல்டி ஆக்ஸில் பஸ்கள், அதிவேகமாக செல்லும் விமானங்கள்
என போக்குவரத்து முறைகள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றாலும், ரயில் பயணம் நம் வாழ்க்கையுடன்
பின்னி பிணைந்து விட்டன. எனவே தற்போதும் கூட ரயில் பயணங்களுக்கு நிறைய பேர் முன்னுரிமை
வழங்குகின்றனர்.
ரயில் பயணங்களுக்காக ரயில்வே ஸ்டேஷன்களுக்கு செல்லும்போது நிறைய
விஷயங்கள் நம் கண்களில் சிக்கும். அப்படி நாம் கவனிக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்று
ரயில் நிலையத்தின் பெயர் பலகை. அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் மஞ்சள் நிற பெயர் பலகை
வைக்கப்பட்டிருக்கும். இதில் கருப்பு நிறத்தில் சம்பந்தப்பட்ட ஊரின் பெயர் எழுதப்பட்டிருக்கும்.
ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உள்ளூர் மொழி என்று மொத்தம் 3 மொழிகளில்
ஊரின் பெயர் எழுதப்பட்டிருக்கும். உள்ளூர் மொழியை பொறுத்தவரையில், தமிழ்நாடு என்றால்
தமிழிலும், கர்நாடகா என்றால் கன்னடத்திலும், கேரளா என்றால் மலையாளத்திலும், ஆந்திரா
என்றால் தெலுங்கிலும் எழுதப்பட்டிருக்கும். ரயில்வே ஸ்டேஷனின் ஆரம்பத்திலும், இறுதியிலும்
இந்த மஞ்சள் நிற பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும்
3 மொழிகளில் பெயருடன் கருப்பு நிற எழுத்துக்கள்தான் எழுதப் பட்டிருக்கும். தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த வண்ண
கலவையை இந்திய ரயில்வே பயன்படுத்தி வருகிறது. மஞ்சள் நிற பின்னணியில் கருப்பு நிறத்தில்
எழுதும்போது, தூரத்தில் இருந்து பார்த்தால் கூட கண்களுக்கு எளிதாக புலப்படும். இதன்
காரணமாகவே அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும், பெயர் பலகைகள் மஞ்சள் நிறத்தில் வைக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment