Friday, May 20, 2022

இலியா மெச்னிகோவ்

 இலியா மெச்னிகோவ்


நோய் எதிர்ப்பாற்றல் குறித்த ஆய்வுகளின் முன்னோடியான இலியா இல்யிச் மெச்னிகோவ் (ஐடலய ஐடலih ஆநஉhnமைழஎ) 1845ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி ரஷ்யாவின் பானாசோவ்கா என்ற ஊரில் (தற்போது உக்ரைனில் உள்ளது) பிறந்தார்.

 

 இவர் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பிறகு காட்டிங்கன்இ கீஸன் பல்கலைக்கழகங்கள்இ மூனிச் அகாடமி ஆய்வுக்கூடங்களில் பணிபுரிந்தார்.

 

 இவர் நூற்புழுக்கள் குறித்தும்இ தட்டைப் புழுக்களின் செல்லக செரிமானம்இ விலங்கினங்களின் கருவளர்ச்சி குறித்தும் ஆராய்ந்தார்.

 

 நுண்ணுயிரிகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்டார். நட்சத்திர மீனின் லார்வா குறித்து ஆராய்ந்தார். உயிரினங்களின் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு இருப்பதைக் கண்டறிந்தார்.

 

 இதற்காக இவருக்கு 1908ஆம் ஆண்டு பால் எர்லிச் என்பவருடன் இணைந்து மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் மூப்பியல் (பநசழவெழடழபல) என்ற சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தினார்.

 

 'நோய் எதிர்ப்பு சக்தி துறையின் தந்தை' என்று போற்றப்படும் இலியா மெச்னிகோவ் 1916ஆம் ஆண்டு மறைந்தார்.



No comments:

Post a Comment