Thursday, May 5, 2022

வெட்டென பேசேல் ஔவை

 வெட்டென பேசேல் ஔவை


மிக மிக கடினமான செயல் என்றால் அழகாக பேசுவதுதான்.

சரியாக பேசத் தெரியாமல், எவ்வளவு சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம்?

கணவன் - மனைவி

பெற்றோர் - பிள்ளைகள்

உயர் அதிகாரி - கீழே வேலை செய்பவர்கள்

உறவினர்கள் - நண்பர்கள்

என்று எங்கும்

இனிமையாக

பேசுவதால் உறவுகள் பலப்படும், வாழ்க்கை

இனிமையாக

ும் .

ஆனால், எப்படி

இனிமையாக

பேசுவது?

அது பெரிய விஷயம்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நமக்கு பல கருத்துகள் கிடைக்கின்றன.

ஒளவை சொல்கிறார்.

"வெட்டென பேசேல்"

அப்படின்னா என்ன?

மனைவி: ஏங்க , இன்னிக்கு சாயங்காலம் சினிமாவுக்குப் போகலாமா?

கணவன்: முடியாது. மனுஷனுக்கு தலைக்கு மேல வேலை கிடக்கு, இதுல சினிமாவாம் சினிமா...நல்ல நேரம் பாத்தியே சினிமா போக

இது வெட்டென பேசுவது.

மாறாக,

கணவன்:

இன்னிக்கு கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கும்மா....நிறைய வேலை இருக்கு. நாளைக்கு போகலாமா? என்ன சொல்ற...

செய்தி ஒண்ணுதான், சொல்லுகிற விதம் வேற.

அதிகாரி: இந்த வருஷம் கணக்கு முடிக்கும் போது , எப்படியாவது 10% இலாபம் வரணும்...இல்லைனா பங்குதார்களிடம் பதில் சொல்ல முடியாது...

கீழே வேலை செய்பவர்: அது எப்படிங்க முடியும். முடியவே முடியாது. ஏற்கனவே ரொம்ப நட்டத்தில் இருக்கு, இதுல 10% சதவீதம் இலாபமா...முடியவே முடியாது.

இது வெட்டென பேசுவது.

மாறாக

"10% சதவீதமா ? கொஞ்சம் கஷ்டம் தான்...இருந்தாலும் முயற்சி செஞ்சு பாக்குறேன்...ஒரு நாள் அவகாசம் கொடுங்க...பாத்துட்டு நாளைக்கு சொல்றேன்"

மறு நாள் வந்து

"நீங்க சொன்னதால ரொம்ப முயற்சி செஞ்சு பாத்தேன்...10% சதவீதம் வராது போல இருக்கு...அதிக பட்சம் 3% சதவீதம் வரலாம்...."

இப்படி மென்மையா எடுத்துச் சொன்னால் கேட்க இதமாக இருக்கும்.

முகத்தில் அடிப்பது மாதிரி பேசக் கூடாது.

முடியாது, நடக்காது, ஆகாது, என்று பேசக் கூடாது.

அதையே மென்மையாக பேசிப் பழக வேண்டும்.

மற்றவர் முகம் வாடும் படி பேசக் கூடாது.

மரத்தில் கோடாலி போடுவது மாதிரி பேசக் கூடாது.

FB போன்ற ஊடகங்களில், நமக்கு ஏற்காதது - காணும் போது - வெட்டென ஏதோ தனிப்பட - முகம் தெரியாதோரை தரமற்று விமர்சிப்பதும் கூட சேர்த்து பார்க்கலாம்.

பூ பறிப்பது போல மென்மையாக இருக்க வேண்டும் பேச்சு.

அழகாக பேச ஒளவை சொல்லும் வழி இது ...

நல்லதுன்னு தெரிஞ்சா முயற்சி செஞ்சு பாக்காமலா இருக்கப் போகிறோம் !

கட்டாயம் செய்வோம் தானே ?



No comments:

Post a Comment