Wednesday, May 18, 2022

தேர்.

 தேர்.


தேர்த் திருவிழா என்பது பலதரப்பட்ட மக்களை ஒன்று சேர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது...

ஊர்கூடித் தேர் இழுத்தால் தான் தேர்த் திருவிழாவினைக் கொண்டாட முடியும். இது ஒற்றுமையை மறைமுகமாக வலியுறுத்தும் விழா ஆகும்.

சிலப்பதிகாரம்

மணிமேகலை போன்ற சங்க கால நூல்களில்

தேரின் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது..

மன்னர்களின் போர் படையில்

நான்கு பிரிவுகளில்

தேர்படை முக்கிய பங்கு வகித்தது.

தேர்ப்படை

காலாட்படை

யானைப்படை

குதிரைப்படை

கோவில்களில் தேர் ஓடுவதற்கு வசதியாக

நான்கு வீதிகளை அமைத்தனர்.

கீழ, மேல, தெற்கு, வடக்கு ரத வீதிகள்

என பெயரிட்டனர்.

தமிழகத்தில் 866 தேர்கள் தற்போது உள்ளன.

இன்றைய தேர்கள் விசயநகர நாயக்கர் ஆட்சிக் காலத்தில் செய்விக்கப்பட்டவை ஆகும்

பெருமாள், சிவன் கோயிலுக்கு ஏற்ப பத்து தாளம் எனும் தசதாள அளவிலான தேர்கள், நவதாளம் எனப்படும் ஒன்பது தாளத்தில் செய்யப்பட்ட அம்மன் கோயில் தேர்கள், பஞ்ச தாளம் எனப்படும் ஐந்து தாளத்தில் குறுகிய வடிவில் செய்யப்படும் விநாயகர் கோயில் தேர்கள் என்று விதவிதமாக உள்ளது.

இந்த தேர்களை ஒருபடி , அறைப்படி, கால் படி என்ற மூன்று அளவுகளை கொண்டவை.

இவற்றில் எனக்கு தெரிந்து தமிழகத்தில் நான்கு ஒருபடித் தேர்கள் தான் உள்ளன.

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரைத் தேர்.

திருவாரூர் தியாகராஜர் ஆழித்தேர்.

திருநெல்வேலி நெல்லையப்பர் தேர்.

நான்காவது ஶ்ரீவில்லிபுத்தூர் தேர்

ஆனால் பொதுவாக

திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருநெல்வேலி கும்பகோணம்

ஆகியவை நான்கு இடங்களில் உள்ளது.

தேரின் பீடம் மரத்தால் ஆனது.

இது முழுவதும் மரச்சிற்பங்களால் அலங்கரிக்கப் பட்டு இருக்கும்.

மரங்களை வைத்துத் தேர் செய்யும் மரபு தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்துள்ளது.

மரத் தேர்களின் அடிப்படையில்தான் கற்தேர்கள் என்னும் ஒற்றைக்கல் ரதங்கள், பல்லவர்களால்

மாமல்லபுரத்திலும், பாண்டியர்களால் கழுகு மலையிலும் அமைக்கப்பட்டன.

அவை நெடுந்தேர்,

பொற்றேர்,

கொடிஞ்சி

நெடுந்தேர்,

கொடித்தேர்,

அணிகொள்தேர்

என்று பலவகையான பெயர்கள் தேர்களுக்கு வழங்கப்பட்டன.

சிலப்பதிகாரம் புத்தக் கடவுளுக்கு என்று தேர்த்திருவிழா நடைபெற்றதைக் குறிப்பிடுகிறது.

தேரின் அமைப்பைப் பொறுத்தவரை அது கோயில் விமானத்தின் அமைப்பைப் பிரதிபலிப்பதாகவே அமைகிறது.

இத்தேர்

சதுரம்,

அறுகோணம்,

பதின்கோணம், பன்னிரண்டுகோணம்,

வட்டம்,

நீள்வட்டம்,

நீள் சதுரம்,

எண்கோணம்,

முட்டை வடிவம்

என ஒன்பது வகைகளில் அமைக்கப்படுகிறது

மானசாரம் என்ற நூல் தேரில் இடம்பெற வேண்டிய உருவங்கள் இவை என சிங்கம், யானை, முதலை, பூதகணம், யக்சி, நாகம், பிரம்மா, விஷ்ணு, சண்முகன், சரஸ்வதி, கணபதி, துர்க்கை, தேவதை, சிறு தெய்வங்கள், அரசன், அர்ச்சகர்கள், பிராமணர், பக்தர்கள், துவாரபாலகர், கின்னரர், நாகர், கருடன் போன்றவற்றைக் கூறுகிறது.

தமிழகத்துத் தேர்களில் முக்கியத் தட்டுகளில் உள்ள சிற்பங்கள் எட்டு அங்குலம் முதல் இரண்டரை அடி உயரமுள்ளனவாக அமைந்திருக்கும்.

சிற்றுருச் சிற்பங்கள் ஆறு அங்குலம் உயரம் உடையனவாகும். தேரின் அச்சுப் பகுதியில் கணபதி, முருகன், பூத கணங்கள் ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தேர்களின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றனர்.

தேர்களில் அதிட்டானப் பகுதிகளில் இந்து சமயத் தொன்மக் கதைகளும், மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைச் சித்திரிக்கும் செய்திகளும், சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும்.

தேரின் பீடத்தில் நாட்டியப் பெண்கள், இசைக் கருவிகளை மீட்டுவோர், அட்டதிக் பாலகர்கள், கஜலட்சுமி ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும்

 



No comments:

Post a Comment