Tuesday, May 31, 2022

திருப்பதி அருமையான தகவல்

 திருப்பதி அருமையான தகவல்

 

*திருப்பதி என்பது அடிவாரப்பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோயிலிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலை பற்றி பலரும் அறியாத செய்திகள் சிலவற்றை இங்கு காண்போம்.*

*1. திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.*

*2.திருமலை ஏழுமலையானுடைய பிரசாதம், உடைந்த மண்சட்டியில் வைத்துப் படைக்கப்படும் தயிர்ச்சோறு ஆகும். இப்படி ஒரு பிரசாதப்படையல், வேறு எந்த கடவுளுக்கும் படைக்கப்படுவதில்லை.*

*3.தற்போதுள்ள செயற்கையான பச்சைக்கற்பூரத்தை, தொடர்ந்து சிலவாரங்கள், கருங்கல்லில் தடவினாலே வெடிப்புகள் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், இந்த பச்சைக்கற்பூரத்தை, எத்தனைநாட்கள் ஏழுமலையான் சிலையில் தடவினாலும், சிலையில் வெடிப்புகள் ஏற்படுவதில்லை.*

*4.திருமலையில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் உண்மையான பெயர், "மனோஹரம்" என்பதாகும். 2−8−1715 அன்று தொடங்கி, லட்டு, ஏழுமலையானுக்குப் படைக்கப்பட்டது. 1803ஆம் ஆண்டு முதல்,பக்தர்களுக்கு, பூந்தி வடிவில் விநியோகிக்கப்பட்டது. காலப்போக்கில்தான் லட்டு வடிவிலான மனோஹரம் பிரசாதமாக, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.*

*5.திருமலை ஏழுமலையானுக்குக், கண்களை மறைத்தபடி, நாமமிடுவது சமீபகாலமாகத்தான் உள்ளது. நெடுங்காலமாக, கண்களை மறைக்காமல்தான் நாமமிடப்பட்டு வந்துள்ளது.*

*6. திருமலை ஏழுமலையானுக்குரிய நித்யானுஷ்டான பூஜை கைங்கர்யங்களை வரையறுத்துக் கொடுத்தவர் ஶ்ரீராமானுஜர் ஆவார்.*

*7.திருமலை ஏழுமலையானுடைய சிலை, நவீன கால மெஷின் பாலீஷ்போட்ட சிலைகளைப் போலவே, ஆதிகாலந்தொட்டு அமைந்திருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். கருங்கல்சிலைகளில், இந்தஅளவு மினுமினுப்பான சிலை, இந்த சிலையாகத்தான் இருக்கக்கூடும்.*

*9.திருமலை ஏழுமலையான் கோயிலில், ஆனிமாதம்,தெலுங்கு வருடப் பிறப்பு, தீபாவளி நாட்களில் தர்பார் நடத்தப்படுகிறது. ஆனிமாத தர்பாரின்போது, கோவில் வரவுசெலவுக்கணக்கு ஏழுமலையானிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. பிறகு, ஏழுமலையானின் ஒப்புதல் பெற்றதாகப் பாவித்து, கோயில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் புதிதாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த சிறப்பு வைபவமும், இங்குமட்டும்தான் நடைபெறுகிறது.*

*10. திருமலை ஏழுமலையானுடைய சிலையிலுள்ள சிற்பசாஸ்திர நுட்பங்கள், சிற்பக்கலை வல்லுநர்களுக்கே, அதிசயமாகவும், ஆச்சர்யமூட்டும் விதமாகவும் இருக்கின்றன.*

*11. சென்னை ஆளுநராக இருந்த சர்.தாமஸ் மன்ரோ, திருமலை ஏழுமலையானுக்கு, தினமும்,தயிர்ச்சோறு, சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கு, தன் சொந்த பணத்தில், நைவேத்தியக்கட்டளை ஏற்பாடு செய்தார். இந்த அறக்கட்டளை இன்றும் தொடர்கிறது. இன்றைக்கும் காலை 11.30 மணிக்குக் கோயில் மணி அடிக்கப்பட்டு, மன்ரோ பெயர் படிக்கப்பட்டு, நைவேத்தியம் செய்யப்படுகிறது.*

*12. திருமலை ஏழுமலையானுக்குச் சாற்றப்படும் வஸ்திரம், 21 முழ நீளமும்,5 கிலோ எடையுமுள்ள பட்டு பீதாம்பரமாகும். இதை தயாரிப்பதற்கென்றே சென்னையில் தனிக்கடையே உள்ளது. இந்த வஸ்திரம், ஏழுமலையான் கோயில் அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும். இவ்வளவு பெரிய வஸ்திரம் சாற்றப்படும் கடவுள் ஏழுமலையானே ஆவார்.*

*12. ஏழுமலையான் கோயிலில், முன்பு, வெள்ளிக்கிழமை தோறும், அர்ச்சனைக்கு வில்வஇலை பயன்படுத்தப்பட்டது. அதற்கு பதிலாக, தற்போது, மார்கழிமுழுவதும், வில்வ அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. வில்வஇலை சிவஅர்ச்சனைக்குரியது. வில்வம் அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்படும், ஒரே வைணவஆலயம் ஏழுமலையான் கோயில் மட்டுமே.*

*13. சிவராத்திரியன்று, ஏழுமலையானுக்கு, "ஷேத்ரபாலிகா" உற்சவம் நடத்தப்படுகிறது. அன்று மூலவருக்கு, வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சார்த்தப்பட்டு, வீதியுலா நடைபெறுகிறது.*

*14.ஏழுமலையான் சிலைக்கு எண்ணெய்க்காப்பு சாற்றப்படுவதில்லை; புனுகுக்காப்பு சாற்றப்படுகிறது.*

*15.ஏழுமலையானுக்கு முன்பு, பன்னீர் அபிஷேகமும், மஞ்சள் அபிஷேகமும் நடத்தப்பட்டு வந்தன. சுமார் ஐநூறாண்டுகளுக்கு முன்பு பன்னீர் அபிஷேகமும், சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பு மஞ்சள் அபிஷேகமும் நிறுத்தப்பட்டுவிட்டன.*

*16. ஏழுமலையான் கோயிலில் சாத்துமுறை தென்கலை; ஆனால், கோயில் நிர்வாகம் வடகலையினர் வசமுள்ளது.*

*17. தாள்ளபாக்கம் அன்னமய்யா என்பவர், ஏழுமலையான் மீது 32000 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இது ஒரு சாதனை நிகழ்வாகும்.*

*18. ஏழுமலையான் கோயிலில், மூவகை லட்டுகள் புழக்கத்திலுள்ளன. ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு என்ற இருவகை லட்டுகளும், 750கிராம் எடையில், அதிகளவில் முந்திரி, திராட்சை, உள்ளிட்ட பொருட்களுடன் உயர்தரமான முறையிலும், குறைவான அளவிலும் தயாரிக்கப்படுபவை. இவை, பெரும்பாலும், பிரமுகர்களுக்கே தரப்படுபவை. சராசரியான "புரோக்தம்" லட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதன்எடை 175 கிராம் ஆகும்.*

*19. திருமலை 3000அடி உயரத்திலுள்ள குளிர்ப் பிரதேசமாகும். ஆனால், ஏழுமலையான் சிலையின் வெப்பம் மட்டும், 110டிகிரி ஃபாரன்ஹீட்டிற்குக் குறைவதே கிடையாது. இது, இன்றளவும் அதிசயமான நிகழ்வாகவே உள்ளது.*

*20. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடையுடையது; இதை ஏழுமலையானுக்குச் சாற்ற 3 அர்ச்சகர்கள் தேவை. சூரியகடாரி என்ற ஆபரணம் 5 கிலோ எடையுடையது. இவை போல, அரிதான பல நகைகள், ஏழுமலையானுக்குக் குவிந்துள்ளன. அரியநகைகள் தவிர, சாதாரண நகைகளும் அமோகமாக உள்ளன. இவற்றைச் சேமிக்க இடமோ, ஏழுமலையானுக்கு உடுத்த நேரமோ இல்லாமல் இருப்பதால், சாதாரண நகைகளை மட்டும், ஆண்டிற்கு ஒருமுறை பத்திரிக்கைகளில் விளம்பரஞ்செய்து ஏலம் விடுகிறார்கள்.*

*21. உலகிலேயே அரிதான ஒற்றைக்கண் நீலம் என்ற அரிய ரத்தினக்கல், ஏழுமலையான் கோயிலில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயாகும்.*

*22. ஏழுமலையான் கோயிலின் தலமரம் புளியமரம்.*

*23. ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் கிடையாது; கொண்டாட்டம் மட்டும் உண்டு.*

*24. ஏழுமலையான் கோயிலினுள், கொங்கணச் சித்தர் சமாதியும் உள்ளது. ஆனால், எங்குள்ளது என்பதில் குழப்பம் நிலவுகிறது.*

*25. வெளிநாடுகளில் இருந்து, பூசனைப் பொருட்கள் வருவிக்கப்படும் ஒரே பெருமைக்குரிய கோவில் ஏழுமலையான் கோயிலே ஆகும். (.கா) சீனப் புனுகு, நேபாளக் கஸ்தூரி, நெதர்லாந்து ரோஜா.*

*26. ஏழுமலையானுக்குத் தினசரி , ஒருமுறை அபிஷேகத்திற்கான குறைந்தபட்ச செலவு, தற்போதைய நிலவரப்படி ஒருலட்சம் ரூபாய் ஆகும்.*

No comments:

Post a Comment