வாழை இலை ஃபேஸ் பேக்
·
நாம் ஏராளமான ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தியிருப்போம். அந்தவகையில் தற்போது வாழை இலை ஃபேஸ் பேக்கின் நன்மைகளையும், எப்படி பயன்படுத்துவது என்பதையும் பார்ப்போம்.
·
வாழை இலையில் சாப்பிடுவது தென்னிந்திய மக்களின் பாரம்பரியமான வழக்கமாகும்.
·
ஏனெனில், வாழை இலையில் சாப்பிட்டால் அவ்வளவு உடல் ஆரோக்கியம் கிடைக்கும் என்பது அறிவியல் உண்மை.
·
உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல வாழை இலை சரும ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் கூட உதவுகிறது.
வாழை இலை ஃபேஸ் பேக்ஸ்:
1. அரைத்த வாழை இலையுடன் மஞ்சள், தேன், தயிர் ஆகியவை சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து எடுத்தால், நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
2. வாழை இலை, வெள்ளரிக்காய், கற்றாழைச் சாறு, லெமன் ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாம்.
3. அரைத்த வாழை இலை பவுடருடன், சந்தன பவுடர், ரோஸ் வாட்டர் மற்றும் க்ளிஸரின் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை வைக்கலாம்.
இந்த மூன்று ஃபேஸ் பேக்குகளும் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்றும்.
( உபயோகிப்பதற்க்கு முன் சரும நோய் நிபுனர்களிடம் ஆலோசனை கேட்டு கொள்ளவும்
)

No comments:
Post a Comment