Followers

Monday, October 19, 2026

வடக்கம்பட்டி முனியாண்டி கோயில்.

வடக்கம்பட்டி முனியாண்டி கோயில்.

 சுடச்சுட பிரியாணி - 100 ஆட்டு கிடாய்கள், 150 கோழிகளை கொண்டு கமகம அசைவ விருந்து…

·         மதுரை முனியாண்டி கோயில் திருவிழா மலர் தட்டு ஊர்வலம் முதல் காலை முதல் மதியம் வரை பக்தர்களுக்கு சுடச்சுட பிரியாணி பரிமாறப்பட்டது வரை, மக்களை ஈர்த்து வருகிறது.




·         மதுரை திருமங்கலம் அருகே உள்ளது எஸ்.கோபாலபுரம்.. இந்த கோபாலபுரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வடக்கம்பட்டி முனியாண்டி கோயில்.

·         இந்த ஊரை சேர்ந்தவர்கள்தான், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரியில் புகழ்பெற்ற "முனியாண்டி விலாஸ்" என்ற பெயரில் அசைவ ஓட்டலை நடத்தி வருகிறார்கள். இந்தக் கோயிலின் பெயரில்தான், அனைத்து முனியாண்டி விலாஸ் ஓட்டல்களும் நடத்தப்பட்டும் வருகின்றன.

·         ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு மறுநாளான மாட்டுப் பொங்கல் அன்று இந்த கோவிலில் பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விருந்து நிகழ்ச்சி நடைபெறும்.

·         இதனையொட்டி காலை 250 பெண்கள் பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து முனியாண்டி சாமிக்கு குடம்குடமாக அபிஷேகம் செய்தனர்

·         தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100 ஆட்டு கிடாய்கள், 150 கோழிகளை கொண்டு கமகம அசைவ அன்னதானம் தயாரிக்கப்பட்டது. 60 மூட்டை அரிசியில் தயாரான அசைவ உணவு மதியம் முதல் இரவு வரையில் திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

·         கோபாலபுரம், செங்கபடை, புதுப்பட்டி, குன்னத்தூர், திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 10ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த அசைவ அன்னதானத்தில் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.



·         இதற்கிடையே மாலை 5 மணியளவில் கோபாலபுரம் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து சாமிக்கு அபிஷேகம் செய்ய மலர்தட்டு ஊர்வலம் புறப்பட்டது. கோபாலபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தினை சேர்ந்த பொதுமக்கள், முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களின் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கில் இதில் கலந்து கொண்டனர்.

·         தாம்பூல தட்டில் தேங்காய், பூ, பழம் வைத்து வீட்டிலிருந்து ஊர்வலமாக கோவில் நோக்கி கிளம்பினர். இந்த மலர் தட்டு ஊர்வலத்தின் முன்பு ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் சிலம்பம் சுற்றியபடி வந்தனர்.

·         அதனை தொடர்ந்து இரவில் 100 ஆடுகள், கோழிகள் மற்றும் 3000 கிலோ அரிசி கொண்டு அசைவ உணவு தயார் செய்து அங்கு வந்தவர்களுக்கு சமபந்தி அசைவ விருந்து வழங்கப்பட்டது.

·         தலை குழம்பு, ஈரல் குழம்பு, கறிக் குழம்பு என விதவிதமான அசைவ குழம்பு தயாரித்து பக்தர்களை மகிழ்விக்கும் வண்ணம் சமபந்தி அசைவ உணவு அளித்து கோயில் சார்பில் பரிமாறப்பட்டன.



No comments: