Sunday, October 15, 2017

வெளியானது உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்! : 43 ஆவது இடத்தில் டில்லி



          பொருளாதார உளவுப் பிரிவு என்ற அமைப்பு இவ்வருடம் வெளியிட்ட உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நியூடெல்லி 43 ஆவது இடத்திலும் மும்பை 45 ஆவது இடத்திலும் உள்ளன. நாடுகளின் தகவல் தொடர்பு, டிஜிட்டல் வசதி, சுகாதாரம், உட்கட்டமைப்பு மற்றும் தனிநபர் பாதுகாப்பு என்பவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப் பட்டு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.

          இம்முறை பட்டியலில் இலண்டன், பாரிஸ் மற்றும் பார்சிலோனா ஆகிய நகரங்களில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் கடும் செல்வாக்கு செலுத்தியுள்ளன. உலகின் மிகப் பாதுகாப்பான நகரங்களாக முதலிடத்தில் ஜப்பானின் டோக்கியோவும் அதைத் தொடர்ந்து சிங்கப்பூர், ஒசாகா, டொரண்டோ மற்றும் மெல்பேர்ன் ஆகிய நகரங்கள் உள்ளன.
 
         மிகவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நாடுகளாக கடைசி 60 ஆவது இடத்தில் கராச்சி நகரும் அதற்கு முன்னதாக யங்கூன், டாக்கா, மற்றும் ஜகார்த்தா ஆகியவை உள்ளன. மிகவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள இரு தெற்காசிய நகரங்களாக வங்கதேசத் தலைநகர் டாக்கா மற்றும் பாகிஸ்தானின் கராச்சி ஆகியவையும் 3 தென்கிழக்கு ஆசிய நாடுகளாக பிலிப்பைன்ஸின் மணிலா, வியட்நாமின் ஹோ சி மின்ஹ், இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தா ஆகியவை விளங்குகின்றன.

            மேலும் கடைசி இடங்களில் இரு மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளின் நகரங்களாக எகிப்தின் கெய்ரோவும் ஈரானின் டெஹ்ரானும் விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment