Sunday, October 15, 2017

தூக்கமின்மை


தூக்கமின்மை



       தூக்கமின்மையிலிருந்து அவதிப்படுகிறீர்களா? இதைச் சாப்பிட்டு பாருங்கள்!
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல தூக்கம் அவசியம்.
மனவுளைச்சல், சரியான உணவு பழக்கங்களைக் கடைப்பிடிக்காதது ஆகியவற்றால் நம்முடைய தூக்கம் பெருமளவு பாதிக்கப்படுகிறது.
நல்ல தூக்கம் கிடைப்பதற்கு என்னென்ன சாப்பிடலாம் என்பதைப் பார்ப்போம்.
வாழைப் பழம் வாழைப்பழத்தில் நிறைய பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. பொட்டாசியம் காலில் தசைப்பிடிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதகிறது. இரத்த ஓட்டத்திற்கும் செரிமானத்திற்கும் வாழைப்பழங்கள் உதவுகின்றன.
தேன் தூக்கம் ஏற்பட தூண்டுகிறதுதேன். செரி செரி பழங்கங்களைச் சாப்பிடுவதால் சீக்கிரமாகத் தூக்கம் வரும்
முட்டை தூக்கம் தடைபடாமல் வருவதற்கு வைட்டமின் டி அவசியம். முட்டையில் வைட்டமின் டி இருப்பதால் அது தூக்கம் வர வகைசெய்கிறது.
பாதாம் பருப்பு நன்றாகத் தூங்குவதற்குத் தேவையான மெக்னீசியம் சத்து பாதாமில் உள்ளது.
 

No comments:

Post a Comment