Wednesday, October 4, 2017

மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?



                மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன? நீங்கள் ஒரு முதலீட்டாளர் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பங்குச்சந்தை மற்றும் பங்குகள் குறித்த எவ்விதமான விபரங்கள் தெரியாத நிலையில், முதலீடு செய்ய கைதேர்ந்த ஒரு அதிகாரியின் உதவி தேவைப்படும். இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விடுப்பட நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மியூச்சவல் ஃபண்ட் திட்டம்முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மொத்தமாக பங்குகளை வாங்கவும் விற்கவும் நிறுவனங்கள் முற்படும். உங்களுக்காக ஒரு எடுத்துக்காட்டு சரி, சூப்பர் ரிட்டன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் என்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை சூப்பர் அசர்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இத்திட்டத்தின் கீழ் பல முதலீட்டாளர்கள் மூலம் சுமார் 100 கோடி ரூபாய் நிதியை திரட்டி அதனை பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டம் ஈக்விட்டி திட்டம் என்றால் பங்குச்சந்தையில் அதிகளவில் முதலீடு செய்யப்படும், டெபிட் ஃபண்ட்ஸ் திட்டமாக இருந்தால் அரசு முதலீட்டு பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்களில் அதிகளவில் முதலீடு செய்யப்படும். தற்போது நீங்கள் தேர்ந்தெடத்துள்ள திட்டத்தில் ஒரு யூனிட் 10 ரூபாய்க்கு அளிக்கப்படுகிறது. சுமார் 1000 யூனிட்களை 10 ரூபாய் வீதம் 10,000 ரூபாய் தொகையை திட்டத்தில் முதலீடு செய்தால். ஒரு வருட காலத்தில் சூப்பர் ரிட்டன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட முதலீட்டின் நெட் அசர்ட் வேல்யூ 12 ரூபாயாக உயரம். இப்போது நீங்கள் இத்திட்டதை விற்றால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் மதிப்பு 12 ரூபாயாக மதிப்பீட்டில் 1000 யூனிட்களை 12,000 ரூபாய்க்கு விற்கலாம். உங்கள் யூனிட்களை யாரேனும் வங்க வரும்பினால என்ன செய்ய வேண்டும்? யூனிட்களின் மதிப்பு 12 ரூபாயாக அதிகரித்துள்ளதால், புதிதாக வாங்கும் நபருக்கு நீங்கள் 12 ரூபாய் மதிப்பீட்டில் விற்பனை செய்யலாம். இந்தியாவில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் மியூச்சுவல் ஃபண்ட்குறித்த தகவல்களை எளிமையாக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. 1. ஈக்விட்டி ஃபண்ட்ஸ் ஈக்விட்டி ஃபண்ட்ஸ் திட்டத்தில் நாம் முதலீடு செய்யப்படும் தொகையில் அதிகளவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும். இதனால் இத்திட்டம் ஆபத்து நிறைந்ததாக கருதப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் சில சமயங்களில் நஷ்டத்தை அடையவும் வாய்ப்புகள் உள்ளது. முதலீட்டாளர்கள் ஆபத்துகளை எதிர்கொண்டு அதிகளவிலான லாபத்தை பெற வேண்டும் என்று விரும்பினால் ஈக்விட்டி ஃபண்ட்ஸ் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இத்திட்டம் குறித்து முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஈக்விட்டி ஃபண்ட்ஸ். 2. டெபிட் ஃபண்ட்ஸ் டெபிட் ஃபண்ட்ஸ் திட்டத்தில் பெரும்பாலான தொகை கடன் சந்தை சார்ந்த கார்பரேட் கடன்கள், வங்கி கடன் பத்திரங்கள் மற்றும் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். ஆபத்துகளை எதிர்கொள்ள விரும்பாத முதலீட்டாளர்களுக்கு இத்திட்டம் உகந்தது. இத்திட்டம் குறித்து முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள டெபிட் ஃபண்ட்ஸ் 3. பேலன்ஸ்ட் ஃபண்ட்ஸ் பேலன்ஸ்ட் ஃபண்ட்ஸ் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் கடன் சந்தையிலும் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால் நிறுவனங்கள் அதிக லாப நோக்கத்திற்காக கடன் சந்தையை விடவும் பங்குச்சந்தையில் அதிகம் முதலீடு செய்யகிறது. சில சமயங்களில் சந்தை நிலவரத்தின் படி முதலீட்டு அளவுகளில் மாற்றம் இருக்கும். இத்திட்டம் குறித்து முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள பேலன்ஸ்ட் ஃபண்ட்ஸ். 4. நாணய சந்தை மியூச்சுவல் ஃபண்ட்கள் நாணய சந்தை மியூச்சுவல் ஃபண்ட்கள் திட்டங்கள் அதிக பணபுழக்கம் தன்மை கொண்டவை. இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகையை நிறுவனங்கள் அதிகளவில் குறைந்த கால அடிப்படையில் பாதுகாப்பான வைப்பு, பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. 5 கில்ட் ஃபண்ட்ஸ் சந்தையில் மிகவும் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களில் கில்ட் ஃபண்ட்ஸ் மிகவும் முக்கியமானவை. இத்திட்டத்தின் திரட்டப்படும் நிதியில் பெரும் பகுதி அரசு பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. அரசு பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால் சந்தையில் பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment