வயதான தம்பதிகள் ஏன் சண்டை போடுகிறார்கள்
வயதானபின் ஏன் கணவனும் மனைவியும் எலியும் பூனையுமாகின்றனர்,
காரணம் ஆரம்ப காலம் தொட்டு வரும் வெருப்புதான்! ஆரம்ப காலத்தில் உள்ள காதல் நாளடைவில் காணாமல் போய் விடுகிறது குழந்தை பிறப்பு, வேலைப்பளு, குழந்தைகள் கணிப்பு இப்படி இயந்திர வாழ்க்கையாகிறது, இதற்கிடையில் தாம்பத்தியம் இயந்திர சூழ்நிலையில் காதல் காணாமல் போகிறது,
பெண், குழந்தைகளை பராமரிப்பது அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பது என்று இயந்திர மய மாகிறாள். ஆண் வேலை பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாடுபடுகிறார்,
ஆச்சு பிள்ளைகள் வளர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் தாயின் தியாகங்கள் தான் கண்முன் தோன்றும் பிள்ளைகளுக்கு பெண்ணும் கணவனின் உதாசீனத்தால் பிள்ளைகளை சார்ந்து விடுவாள், காலப் போக்கில் பிள்ளைகள் தாயைத்தான் கவணிக்கிறார்கள் தகப்பனை கவணிப்பதில்ல என்ற குறைபாடு கணவனுக்கு, பேரக் குழந்தைகளை கவணிக்கிறாள் தன்னை கவணிப்பதில்லையே என்ற ஆதங்கம் கணவனுக்கு, நாடி தளர்ந்து நோயில் வீழ்ந்து பின் மனைவியின் சேவை தேவைப்படும் ஆணுக்கு ஆனால் மனைவிக்கோ, அவள் வாழ்நாளில் அனுசரிக்காத கணவனை புறக்கணிப்பாள்
இந்த காரணங்களாலேயே அவர்கள் எதிரும் புதிருமாக, எலியும் பூனையுமாக காதல் இல்லாமல் காலத்தை கடத்துவர் ஆரம்ப காலமுதல் தொடர்ந்து வரும் கணவனின் அன்பு மாறாதிருக்கும் தம்பதிகள் இறுதிவரை ஒருவரை ஒருவர் காதலித்துக் கொண்டே இருப்பர் அத்தகைய தம்பதிகள் வெகு அரிது அவர்கள் இறைவனால் ஆசீர்வதிக்க பட்டவர்கள் கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ்வதே இல்லறத்திற்கு அழகு......


No comments:
Post a Comment