Followers

Friday, October 30, 2026

கரும்பாறை முத்தையா கோயில்

மலை மலையா சுடச்சுட சோறு, அண்டா அண்டாவா கறிக்குழம்பு - கறுப்பு நிற கிடா மட்டுமே அனுமதி


·         காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்த வினோத திருவிழாவில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு வயிறு முட்ட கறி விருந்து சாப்பிடலாம்.

·         ஆனால் ஆண்களுக்கு மட்டும் தான். இந்த திருவிழாவில் கட்டாயம் பெண்களுக்கு அனுமதி இல்லை.

·         ஆண்டுதோறும் நடைபெறும் வினோத திருவிழா மதுரை மாவட்டம் அனுப்பப்பட்டி அருகே சொரிக்காம்பட்டியில் அறுவடைக் காலத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கிடா வெட்டு சமபந்தித் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.

·         செக்காணூரணி அருகே சொரிக்காம்பட்டி – பெருமாள் கோயில்பட்டி கண்மாய்கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கரும்பாறை முத்தையா கோயிலில் தான் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும்.



·         400-500 வருடங்களாக நடைபெறும் கிடா வெட்டு விருந்து இந்தக் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் அறுவடைக் காலமான தை அல்லது மாசி மாதங்களில் கிடா வெட்டி அனைத்து சமூக மக்களுக்கும் விருந்து வைப்பதைப் பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர்.

·         இந்த பாரம்பரியம் கிட்டதட்ட 400-500 வருடங்களாக வழக்கத்தில் உள்ளது என்று கூறுகின்றனர். இந்த கிடா விருந்தில் சமைக்கப்படும் அனைத்தும் கருப்பு கிடாக்கள் மட்டுமே.

·         காணிக்கையாக கறுப்பு நிற கிடாக்கள் மட்டுமே அளிப்பார்கள். அந்தக் கிடாக்கள் அப்பகுதியில் தானாக வளர்ந்து வரும். தோட்டங்களில் உள்ள பயிர்களை இந்தக் கிடாக்கள் உண்ண வரும்போது முத்தையா சாமியே வந்து உண்ணுவதாக நினைத்து விரட்டுவது கிடையாது என்கின்றனர்.

·         மலை மலையா சோறு, அண்டா அண்டாவா கறிக் குழம்பு பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கி நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு உணவாக சமைக்கப்படும்.


·         மூட்டை மூட்டையாக வந்த அரிசியை சமைத்து குவியலாக தயார் செய்வார்கள். கரும்பாறை முத்தையா சுவாமிக்கு உருவம் கிடையாததால் அங்கு சமைக்கப்பட்ட அன்னத்தை மலை போல் குவித்து., பிறகு கறி குழம்பு எடுத்து வந்து அன்னத்தில் படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

·         அதனைத் தொடர்ந்து, அண்டாக்களில் தயாராக இருந்த கறி குழம்பு கறிகளை மட்டும் தனியாக பிரித்து ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டி வைத்து கறியில் உள்ள எலும்புகளை தனியே பிரித்து எடுத்து விடுவார்கள்.

·         யார் வேணாலும் எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம் அங்கே வந்து இருக்கும் அனைவர்க்கும் இலை போட்டு சுடச்சுட சோறு போட்டு, கறி குவியல் வைத்து, குழம்பு ஊற்றி கறி விருந்து வைக்கப்படும்.

·         உணவருந்திய பின் இலையை எடுக்கக் கூடாது என்பதால் அப்படியே விட்டுச்சென்றனர். ஒரு வாரம் கழித்து, இலைகள் காய்ந்த பின்னர்தான் இந்தக் கோயில் அமைந்துள்ள பகுதிக்குப் பெண்கள் வருவார்களாம்.

No comments: