ஊர் ஸ்பெஷல் - காரைக்குடி தேன்குழல்
·
காரைக்குடி நாட்டரசன்கோட்டையில், செட்டிநாட்டுப் பலகாரம் என்றாலே தனி மவுசுதான்.
·
இதற்கென்றே தனி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
·
செட்டிநாடு, கட்டடக்கலைக்கு மட்டும் புகழ்பெற்றதல்ல; பலகார வகைகளுக்கும்தான்.
·
செட்டிநாட்டு வீடுகளில் எந்த விசேஷமானாலும் தவறாமல் இடம்பெறும் ஒரு பாரம்பரிய எண்ணெய்ப் பலகாரம் தேன்குழல்.
·
பச்சரிசி மற்றும் உளுந்தம்பருப்பு மாவை பதமாக வறுத்து, காரத்திற்கு ஏற்ப சீரகம், எள் அல்லது மிளகாய்த்தூள் சேர்த்து பிசைந்து, அச்சு மூலம் சுருள் சுருளாகப் பிழிந்து எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும்.
·
மொறுமொறுப்பாகவும், நாவில் கரையும் மென்மையாகவும் இருக்கும்.
·
பொரித்த காரமில்லாத தேன்குழலை, சர்க்கரை பாகில் ஊறவைத்து செய்யப்படும் இனிப்பு வகை இனிப்பு தேன்குழல்.
·
இங்கு தயாரிக்கக்கூடிய பலகாரங்கள் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
·
காரைக்குடி ஸ்பெஷலான இந்த பலகாரம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மண ஓலை
·
மண ஓலை என்பது பனை ஓலைக்குள் (சில பகுதிகளில் தென்னை ஓலை) இனிப்பு பூரணத்தை வைத்து, நீளவாக்கில் சுருட்டி ஆவியில் வேகவைக்கப்படும் ஒரு வகை கொழுக்கட்டை.
·
பாரம்பரியமிக்க இந்த பலகாரம் செட்டிநாட்டு சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
·
இங்கு தயாரிக்கப்படும் பலகாரங்கள், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் வகையில் இருக்கும்.
·
உடல்நலத்துக்குக் கெடுதல் தராது.
·
செட்டிநாட்டுப் பலகாரங்கள், சென்னை, கோவை, மதுரை என தமிழகத்தில் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என தமிழர்கள் இருக்கும் எல்லா நாடுகளுக்கும் பயணமாகிக்கொண்டிருக்கின்றன.

No comments:
Post a Comment