Tuesday, April 14, 2026

நெய்க்காரப்பட்டி அச்சு வெல்லம்

நெய்க்காரப்பட்டி அச்சு வெல்லம்



·         நெய்க்காரப்பட்டி. இந்த ஊரின் பெயரை சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது அங்கு தயாரிக்கப்படுகிற அச்சுவெல்லம் தான்.

·         தமிழகம் மட்டுமின்றி, கேரளாவிலும் இங்கு தயாரிக்கப்படுகிற அச்சுவெல்லத்துக்கு மவுசு அதிகம்.

·         பழநியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் கரும்பு சாகுபடி நடக்கிறது.

·         சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

·         வயல்களிலேயே ஆங்காங்கே அச்சுவெல்ல தயாரிப்பு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

·         இதனால் வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி பகுதிகளில் இயங்குகின்றன.

·         இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அச்சு வெல்லம் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

·         கரும்புகளை சாறு பிழிந்து, அதை நன்கு காய்ச்சுகின்றனர்.

·         பின்னர் காய்ச்சிய குழம்பு போன்ற வெல்லப் பாகுவை மரத்தினால் ஆன அச்சுக்கட்டையில் ஊற்றி சூடு ஆறியதும் காய வைத்து கீழே கொட்டுகின்றனர்.

·         இதன் பின், சுவையான அச்சு வெல்லம் விற்பனைக்கு தயாராகிறது.

·         நெய்க்காரப்பட்டியில் உற்பத்தியாகும் அச்சுவெல்லம், அங்குள்ள சந்தைகளிலேயே ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

·         இதில் தமிழக-கேரள வியாபாரிகள் கலந்து கலந்து கொண்டு போட்டி போட்டு வெல்லத்தை வாங்கி செல்வர்.

·         தமிழகம் முழுக்க அச்சுவெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் இங்கிருந்து அனுப்பப் படுகிறது.

·         நல்ல வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட வெல்லம் முதல் தரமானது. தரத்தையும் நிறத்தையும் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment