வாக்கிங்.
காலையில எழுந்து Brisk walking போயிட்டு ரெண்டு பால் பாக்கெட் வாங்கிட்டு வீட்டுக்கு திரும்ப வருவது பெரிய போராட்டமா இருக்குடா...இந்த வாக்கிங் சைக்கோக்கள் பண்ற அட்டூழியங்கள்.
முதல்ல மெயின் ரோட்ல வாக்கிங் /ஜாக்கிங் போறதே தப்பு.அதுவும் Pedestrian path) நடைபாதை இல்லாத ரோட்டில் நடக்கும் போது வலதுபுறமாக செல்வதுதான் Safe.அப்போதுதான் பின்னால் கவனக்குறைவாக வரும் வாகனஓட்டிகளிடமிருந்தும்..எதிரே அதிவேகமாக வரும் வாகனங்களிடமிருந்தும்,மொபைலை நோண்டிக்கொண்டே போகும் நீங்கள் உயிர் தப்பிக்க முடியும்(நான் பெரும்பாலும் வாக்கிங் போகும் போது மொபைல் எடுத்துப் போவதில்லை.கொண்டு சென்றாலும் நோண்டிக் கொண்டு போக மாட்டேன்).
1.ஒருத்தன் வாக்கிங் போறானா இல்ல ஆழ்கடல் ல Swimming போறானான்னே தெரில.நீச்சல் அடிக்கறது மாதிரி காத்துல துடுப்பு போட்டுட்டு போறான்.
2.இன்னொருத்தன்..ரெண்டு கையையும் Compass மாதிரி நினைச்சி காத்துல வட்டம் போட்டுட்டே போறான். Clockwise and Anticlockwiseன்னு மாறி மாறி..
(பக்கத்துல போயிட்டு இருக்கறவன் கண்ல குத்தாதீங்கடா 😡😡)
3.இன்னொருத்தன் திடீர்னு ஓடறான்.நிக்கறான்.கும்பிடறான்.
Flying kiss பண்றான்.சுத்தி பார்த்தா யாருமில்லை.ஆத்தி...#வானவில் கோஷ்டியோன்னு நினைச்சா..தூரத்துல முக்குல இருக்கற பிள்ளையாரை கும்பிட்டு தோப்புக்கரணம் போடறான்.
4.அப்பறம் நாலு கால் நா*ய்களை ஆயிருக்க அழைத்துத் செல்லும் ரெண்டு கால் நா*ய்கள்.லோக்கல் நா*ய்களுக்கும் வந்தேறி நா*ய்களுக்கும் நடக்கும் ஏரியா பிரச்சினையில நம்ம மேல பாய வராம கவனமா இருக்க வேண்டி இருக்கு.
5.இதில்லாம இன்னைக்கு ஒருத்தன் விசித்திரமா வாக்கிங் வந்தான்..
தக்காளி ரிவர்ஸ்ல வறான்!! பைத்தியக்கார ய்நா.டிக்கிலோனா போடற மாதிரி...ரிவர்ஸ்லயே போயிட்டு இருக்கான்..
எவன்டா சொல்லி கொடுத்தான் இப்படியெல்லாம் வாங்கிங் போகனும்ன்னு?
வார்ம்-அப் பண்றதுன்னா வீட்டு மொட்டை மாடியில பண்ணுங்க. இல்லையா பீச்..கிரவுண்ட்..பார்க்ல பண்ணு..இல்லையா எங்கேயாவது ஜிம்முக்கு போய் ஜம்முனு பண்ணு...
நெடுஞ்சாலையில ஏன்டா வாக்கிங்ன்னு இப்படி அழிச்சாட்டியம் பண்றீங்க?
No comments:
Post a Comment