புளிய மரங்கள்
எத்தனையோ மரங்கள் இருப்பினும் புளிய மரத்தை ஏன் சாலையோரம் வைத்தார்கள்?
தமிழ் நாட்டில் சாலை ஓரங்களில் நிறைய புளிய மரங்களை காணலாம்.
புளிய மரங்கள் ஏன் இயற்கையாக காடுகளில் காணமுடிவதில்லை. புளியமரம் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த மர வகைகள்.
அதனால் தென்னிந்திய இயற்கை காடுகளில் காணமுடியாது. இந்த மரம் மற்ற தாவரங்களைப் போல் பிற தாவரங்களை அழிக்க முயலாது. தான் பாடு என்று தனியாக நிற்கும். வளரும்.
அரேபியர்கள் இந்த புளியை tamar-ul-hind இந்திய பேரிச்சை பழம் என்றதால் ஆங்கிலத்திலும் டெமரிண்ட் ஆயிற்று!
இதை ஏன் சாலை ஓரமாக நட்டினார்கள். புளியமரத்துக்கு நீர் அதிகம் தேவையில்லை, மரதண்டுக்கு கொஞ்சம் இடம்தான் தேவை, வேர்கள் மற்ற மரங்களைப்போல் பக்கவாட்டாக வளராமல் மேல் தூக்காமல் பூமிக்கு கீழ்மட்டும் செல்லும்.
ரோடு பக்கம் பரந்த நிழல். புளியங்காய்கள் ,பஞ்சாயத்துக்களுக்கு கிராமங்களுக்கு வருமானம், உபயோகம்.
நீண்ட நூற்றுக்கணக்கான வருட ஆயுள். கிளைகள் ஒடிந்து புங்கை வேங்கை மரங்கள் போல் ரோடில் விழாது.
பலத்த காற்று ,மழை ,வெயில் தாங்கும்...
அதனால்தான் ரோட்டுக்கு இரு பக்கமும் புளிய மரத்தை வைத்தார்கள்..
கூடுதல் தகவலாக.....
அன்றைய காலகட்டத்தில் இடம் விட்டு இடம் செல்வதற்கு மக்கள், கால் நடையாகவும், கால்நடைகளை பயன்படுத்தியும் தான் பயணப் பட்டு வந்தனர். அவ்வாறு பயணிக்கையில், நாவறட்சி ஏற்படும்.
நீர்நிலைகள் கண்ணுக்குத் தெரியாத நிலையில், இந்த புளிய மரத்தின் இலைகள் மற்றும் காய்களை பறித்து, மென்றுகொண்டே நடந்து செல்வார்களாம். ஏனெனில், புளிப்பு தன்மையின் காரணமாக வாயில் தொடர்ந்து எச்சில் ஊறும். அதனால் நீர் சுரப்பது சுழற்சி முறையில் நடந்து, தண்ணீர் தாகத்தை தீர்க்கும்.
இதன் காரணமாகத் தான் புளிய மரங்களை சாலை ஓரங்களில் நடும் பழக்கத்தை அன்றைய அரசர்கள் மேற்கொண்டனர் என்று, பெரியவர்கள் சொல்ல நான் அறிந்து கொண்டேன்.

No comments:
Post a Comment