Wednesday, April 22, 2026

பிரியாணி நகரம்

பிரியாணி நகரம்


·         பிரியாணி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் ஹைதராபாத் நகரம் ஆகும். தென்னிந்தியர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களையும் கவரும் இந்திய பிரியாணி வகைகளுள் ஒன்றாக ஹைதராபாத் பிரியாணி மக்களை ஈர்த்துள்ளது.

·         இது பாசுமதி அரிசியுடன் கோழி அல்லது ஆட்டிறைச்சி கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் நறுமணம் கமழ்ந்து பிரியாணி பிரியர்களை சுண்டி இழுக்கின்றன.

·         இது இந்திய சமையல் பாணி வகையில் சமைக்கப்படுகிறது. இது நிஜாம் அரண்மனை சமையலில் மீன், காடை, இறால், மான், முயல் உட்பட 49 வகைகளில் தயாரிக்கப்பட்டது.

·         கடந்த ஓராண்டில் ஐதராபாத் நகரத்தில் மட்டும் 1 கோடியோ 30 லட்சம் பிரியாணிகள் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சிக்கன் பிரியாணியும், அதற்கு அடுத்தப்படியாக வெஜ் பிரியாணியும் ஆர்டர் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



·         ஐதராபாத்திற்கு அடுத்தப்படியாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடி பிரியாணிகள் கடைகளில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

·         50 லட்சம் பிரியாணி ஆர்டர்களுடன் 3-வது இடத்தில் சென்னை இருப்பதும் தெரிய வந்துள்ளது.

·         இந்த ஆண்டு நாடுமுழுவதும் 83 மில்லியன் அதாவது 8.3 கோடி ஆர்டர்களைப் பெற்று அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாகத் திகழ்கிறது.

·         ஒரு நிமிடத்துக்கு 158 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் இதை வாசித்துக்கொண்டிருக்கும் ஒரு நொடியில் இரண்டு பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கும்.

·         நொறுக்கு தீனிகளில் சிக்கன் ரோல்கள் அதிகம் விற்பனையாகியிருகின்றன. பிரதான உணவாயிருந்த சிக்கன், ஸ்நாக்ஸாக அதிகம் விரும்பப்பட்டுள்ளது. 2.48 மில்லியன் சிக்கன் ரோல் ஆர்டர்கள் பதிவாகியிருக்கின்றன.

·         தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டின் பிரியாணி நகரம் என திண்டுக்கல் அழைக்கப்படுகிறது.

·         வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், ஆம்பூர் பிரியாணி என சக்கைப்போடு போடுகிறது. திண்டுக்கல் பிரியாணி, ராவுத்தர் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி என வகை வகையாக பிரியாணி நாவின் சுவையை தன் கட்டுக்குள் வைத்துள்ளது.

No comments:

Post a Comment