செப்டிக் டேங்க் கட்டுறது
நம்ம வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்டுறது ஒரு முக்கியமான விஷயம். ஏனா பிரச்சினையே இதுல தான் ஆரம்பிக்குது. பெரும்பாலும் இந்த செப்டிக் டேங்க எப்படி கட்டுவாங்கனா ஒரு சிங்கிள் தொட்டி மாதிரி. இந்த தொட்டி வந்து ஈஸியா நிரம்பிரும். இதனால செப்டிக் டேங்க் கிளீனர் வச்சு அடிக்கடி சுத்தம் பன்ற சூழல் வந்துரும். இந்த கிளீன் ப்ராஸஸுக்கே தனியா பணம் செலவு பண்ற மாதிரி இருக்கும். இதுல பாத்திங்கனா ஒரு வருசத்துலயே 5,6 தடவ எடுக்குற மாதிரி சூழல் வந்துரும். ஆனா சீவேஜ் லைன் உள்ள ஏரியால பெரும்பாலும் பிரச்சினை இருக்காது.
இந்த செப்டிக் டேங்க் கட்டுறதுக்கு தனி ரூலே இருக்கு. அதாவது டேங்கோட அகலம் 75cmக்கு குறையாம இருக்கனும் நீளம் பாத்திங்கனா அகலத்தை விட 2லிருந்து 4 மடங்கு பெரியதாக இருக்கனும். ஆழம் பாத்திங்கனா குறைந்தது 1 மீட்டர் இருக்கணும். இந்த மாதிரி இந்த செப்டிக் அமைக்கும் போது 3 தொட்டியா பிரிச்சுருவோம். அப்போ நமக்கு இடையில ரெண்டு தடுப்பு சுவர் வரும். முதல் சுவர்ல ஓட்டை விட்டு கட்டுவோம் ஏனா வர்ற வேஸ்ட் வந்து முதல்ல உள்ள ரெண்டு தொட்டியிலயும் மோதி செட்டில் ஆகும். இரண்டாவது சுவர் பாத்திங்கனா ப்ளெயின் சுவராதான் இருக்கும். இந்த சுவர் முதல் சுவரவிட லெவல் குறைவாக இருக்கும்.ஏனா வெறும் வாட்டர் மட்டும் நிரம்பி 3வது தொட்டிக்குள்ள வர்றதுக்குகாக.
இந்த 3வது தொட்டிக்குள்ளேயும் வேஸ்ட் வந்து கொஞ்சமாக செட்டில் ஆகும். அதனாலதான் கிளீன் பண்றதுக்கு வசதியா முதல் ரெண்டு தொட்டிக்கும் சேர்த்து ஒரு மூடியும் மூனாவது தொட்டிக்கு ஒரு மூடியும் கொடுப்போம்.அந்த மூன்றாவது தொட்டியில் இருந்து வர்ற தண்ணீர், வெளில தனியா சோக் பிட் போட்டு பூமிக்குள்ள ஃபில்ட்ரேசன் ப்ராஸஸ் மூலம் அனுப்பிரலாம். எதிர்காலத்துல சீவேஜ் லைன் நம்ம ஏரியாக்கு வரும்போது அதுல கொண்டு போய் விட்டரலாம்.
இந்த மாதிரி செப்டிக் டேங்க் அமைக்கும் போது என்ன நன்மைனு கேட்டிங்கனா 20 வருசத்துக்கு ஒரு தடவை தான் இந்த செப்டிக் டேங்க் கிளீன் பன்ற மாதிரி இருக்கும். இந்த செப்டிக் டேங்க நாம பையோ செப்டிக் டேங்கா கூட பயன்படுத்திக்கலாம்.

No comments:
Post a Comment