Tuesday, April 14, 2026

கோபால்பட்டி பால் பன்

கோபால்பட்டி பால் பன்



·         உணவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உணவு உண்டு. திருநெல்வேலி அல்வா. காஞ்சிபுரம் இட்லி. காரைக்குடி சீப்பு சீடை. மணப்பாறை முறுக்கு. சாத்தூர் காராசேவு. திருவில்லிபுத்தூர் பால்கோவா. இப்படி பல வகை உணவுகள் ஒவ்வொரு ஊருக்கும் பெருமை சேர்க்கின்றன.

·         அதுபோலவே திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்த கோபால்பட்டி என்ற சிற்றூரில் தயாரிக்கப்படும்பால் பன்என்ற உணவு மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது.

·         கோபால்பட்டி பஸ் ஸ்டாப்பிலேயே 45 வருட பாரம்பரியம் கொண்டபால் பன்" கடை உள்ளது.

·         இந்த உணவானது திண்டுக்கல் பகுதி மட்டுமின்றி மதுரை, தேனி முதலான பகுதிகளிலும் பிரபலமாக உள்ளது.

·         ஒரு கிலோ மைதாமாவில் நூறு மில்லி தயிர் விட்டு பின்னர் போதிய அளவு தண்ணீர் மற்றும் சோடா உப்பைக் கலந்து நன்கு பிசைந்து அரைமணி நேரம் ஊறவிட வேண்டும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை நல்லெண்ணெயில் பொரித்து எடுத்த பின்னர் சர்க்கரைப் பாகில் இட்டு சற்று நேரம் கழித்துப் பரிமாற வேண்டும்.

·         சிலர் பாகில் ஏலக்காயும் சுக்கும் வாசனைக்காக சேர்ப்பர்.



·         முற்காலத்தில் பாகு தயாரிக்க சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி அல்லது பனைவெல்லத்தை உபயோகித்தார்கள். தற்காலத்தில் இதன் பயன்பாடு குறைந்து போனதன் காரணமாக வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்துகிறார்கள்.

·         கோபால்பட்டியில் பலர் இந்த பால் பன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திண்டுக்கல்லிலும் பல இடங்களில் பால் பன் கிடைக்கிறது.

·         தேனி, கம்பம், கூடலூர், மதுரைப் பகுதிகளில் பலர் பால் பன்னை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் இதன் சுவை அலாதியானது.

·         கோபால்பட்டி திண்டுக்கல்லில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும் மதுரையிலிருந்து 47 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

·         5 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த பால் பன்னை கோபால்பட்டி வழியாக செல்லும் அனைவரும் வாங்கி சுவைக்கத் தவறுவதில்லை.

·         பார்சலாகவும் சென்று கொண்டே இருக்கும்.

·         திண்டுக்கல்லுக்குச் சென்றால் மறக்காமல் பால் பன்னை வாங்கி சுவைத்து மகிழுங்கள்.

 

No comments:

Post a Comment