அன்றைய முறைகள் உழவர்களிடம் இல்லை
முப்பது வருடங்களுக்கு முன்பு வரை கூட இருந்த முறைகள் ஒன்று கூட இப்போது இருக்கும் உழவர்களிடம் இல்லை...
வீட்டுக் கூரையில் :
1. சுரை
1. கொடி அவரை
2. பீர்க்கன்
3. புடலை
4. மஞ்சள் பூசணி
5. கீரைகள்
6. காய்கறிகள்
கால்நடைகள் :
1. நெய் மற்றும் மோருக்காக - பசுக்கள் (குறைந்தது ஒன்று கறவையில்),
வயக்காட்டில் :
1. சோளம்
2. கம்பு
3. ராகி
4. சிகப்பு நெல்5. தக்காளி,
6. அவரை
7. மிளகாய்,
8. கத்திரி9. எள்,
10.கடலை
11. வெண்டை
வரப்பில் :
1. அகத்தி
2. ஆமணக்கு
3. துவரை
1. பச்சைப்பயறு
2. உளுந்து
3. தட்டை
4. கொண்டைக்கடலை
6. கொத்தமல்லி
உயிர் வேலியில் :
1. பிரண்டை
2. கோவை
3. நுரை பீர்க்கன்
4. சுண்டை
5. மூலிகை செடிகள் கொடிகள்
கால்நடை சாணத்தை எடுத்து ஒரு குழியில் போட்டு மக்குவதற்க்கு மாட்டு கோமியத்தை அதில் ஊற்றுவார்கள்.
தினமும் இந்த சாணம் அள்ளுவது ஒரு வேலையாக காலையிலும் மாலையிலும் செய்ய வேண்டியது இருக்கும். இது நன்றாக மக்கி நல்ல அடி உரமாக இருக்கும்.
களத்து மேடு :
நெல் , கம்பு , சோளம் விளைந்த பின் களத்து மேட்டில் அடித்தும் பின்பு மாடுகள் வைத்து மிதித்தும் தானியங்களை பிடிப்பார்கள்.
மாடுகளுக்கு தீவனமாக தட்டையையும் வைக்கோலையும் பின்பு படப்பு வேய்ந்து அதை கோடைகாலத்திற்க்கு மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்துவார்கள் வைக்கோல் போரில் மழை பேய்ந்தால் தண்ணீர் உள்ளே இறங்காதவாறு வேய வேண்டும்.
சமையலுக்கு :
எள்ளையும் , தேங்காயௌம் செக்கில் ஆட்டி சமையலுக்கு பயன் படுத்துவர்.
சமையலுக்கு என்று எந்த காய்கறியும் , தானியங்களும் கடையில் வாங்குவதே கிடையாது,
கடையில் வாங்குவது என்றால் உப்பு மட்டுமே.
வீட்டிற்க்கு தேவையான பாசி பருப்பு, உளுந்தம் பருப்பு,தட்டை கொண்டைக்கடலை, அனைத்தும் ஊடு பயிராக போட்டு வீட்டுக்கு தேவையான கிடைத்துவிடும்.
கால்நடைகளுக்கு உணவு :
நாம் விளைவித்த தானியங்களில் விற்ப்பனைக்கும் மீதம் உள்ளது கோழிகளுக்கும் கொடுப்பர்.
ஆடுகளுக்கும் பெரும்பாலும் உயிர்வேலியும் கழித்து போடப்படும் தழைகளும். கோழி வீட்டிற்க்கு விருந்தினர் யாரும் வந்தால் அடித்து குழம்பு வைப்பர்.
வீட்டு நிகழ்வுகளிலும் திருவிழாவின்போதும் முழு ஆட்டையும் விருந்து வைப்பார்கள்.
அன்றைய நிலை:
இப்படி ஒன்று கூட வீணாகாமல் அனைத்துமே மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு விவசாயம் செய்பவர் யாரிடமும் கையேந்தும் வழக்கம் இல்லை.
விவசாயம் செய்வதற்கு வெளி ஆட்களை பயன் படுத்துவற்க்கு பதில் சொந்த ஆட்கள்தான் பயன்படுத்தப்பட்டார்கள். அதற்காகவே பல பிள்ளைகளை பெற்றுகொண்டார்கள்..
இன்றைய நிலை:
ஒரு காலத்தில் விவசாயம் செய்பவரை மரியாதையுடன் பார்த்தார்கள்.
ஆனால் இன்று விவசாயிகளை ஏளனமாகவும் சாராயம் காய்ச்சி விற்பனை கடவுளாகவும் பார்க்கிறார்கள் இந்த நிலை வெகு விரைவில் மாறும்...
No comments:
Post a Comment