Tuesday, April 7, 2026

ரயில்கள் ஓடும் போது "தடக் தடக்" என சத்தம் எதனால் இந்த சத்தம்

 ரயில்கள் ஓடும் போது "தடக் தடக்" என சத்தம் எதனால் இந்த சத்தம்


ஓட்ட
வண்டியெல்லாம் இல்லை.. எந்த ரயிலாக இருந்தாலும் தண்டவளத்தில் செல்லும் போது "தடக் தடக்" என சத்தம் வரும் ஏன்?

ரயில்கள் எல்லாம் ஓடும் போது "தடக் தடக்" என சத்தம் கேட்கிறதே எதனால் இந்த சத்தம் கேட்கிறது?

ரயில்களில் பயணம் என்பது நாம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தை தரும். இரவு நேரத்தில் நீங்கள் படுத்துக்கொண்டே ஜிலுஜிலு காற்றில் உங்கள் கண்களை மூடி ரயிலில் வேகத்தை உணர்ந்த படியே மெல்ல அதன் சத்தத்தை கேட்டுக்கொண்டே உங்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை மனதில் அசை போட்டுக்கொண்டே சென்றால் அதை விட சொர்க்கம் வேறு என்னவாக இருக்க முடியும்.

இப்படியாக நீங்கள் ரயிலில் செல்லும் போது ரயிலின் ஓட்டத்தை கவனித்துப்பார்த்தீர்கள் என்றால் ரயில் செல்லும் போது 'தடக் தடக்' என சத்தம் ஒன்று சரியான இடைவெளியில் கேட்டுக்கொண்டே இருக்கும். இது தான் ரயிலில் இசையாக நாம் நினைப்போம். ஆனால் ரயில் பயணத்தில் இந்த 'தடக் தடக் 'சத்தம் எங்கிருந்து வருகிறது. ஏன் வருகிறது? இதுவரை யாராவது யோசித்துள்ளீர்களா?

ரயிலில் வரும் இந்த 'தடக் தடக்' சத்தம் ரயில்களில் சக்கரத்திலிருந்து வருகிறது. அது எப்படி உருவாகிறது என்பதை தெரிந்த கொள்ள வேண்டும் என்றால் நமக்கு ரயில் தண்டவாளங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ரயில் தண்டவாளங்கள் முழுவதும் இரும்பால் ஆனது.

இரும்பு கம்பிகளை துண்டு துண்டாக வெட்டி அதை ஒன்றோடு ஒன்று இணைத்து உருவாக்குவது தான் தண்டவாளம். இப்படியாக துண்டு துண்டாக வெடப்பட்ட இருப்புகளை சேரும் இடத்தில் ரயிலின் சக்கரம் கடந்து செல்லும் போது அந்த 'தடக் தடக்' என்ற சத்தம் உருவாகிறது.

பொதுவாக ரயில்களின் தண்டவாளங்கள் கட்டமைக்கப்படும் போது ஒரு அறிவியல் விதியை மனதில் வைத்து கட்டமைப்பார்கள். அதாவது துண்டு துண்டாக இருக்கும் இருப்பு தண்டவாளங்களை இணைக்கும் போது அது ஒன்றோடு ஒன்று ஒட்டியபடி கட்டமைக்க மாட்டார்கள். மாறாக இருண்டு இடையே சிறிய இடைவெளியை விடுவார்கள்.

இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் தான் சூடான நிலையில் உலோகங்கள் பெரியதாகும் என விதி இந்த இடத்தில் வருகிறது. பொதுவாக ஒரு உலோகம் என்றால் அது சூடாகும் போது அதன் அனுக்கள் எல்லாம் விரிவடையும் அதனால் உலோகம் தற்போது இருக்கும் அமைப்பை விட பெரியதாக மாறும். அதுவே குளிர் அதிகமாக இருக்கும் போது தற்போது இருக்கும் அளவிலிருந்து சுருங்கும்.

ரயில் தண்டவாளங்கள் எல்லாம் இரும்பால் செய்யப்பட்டது என்பதால் இது மழை வெயில், பனி என எல்லா சூழ்நிலைகளையும் தாங்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதால் வெயில் காலங்களில் தண்டவாளம் விரிவடையும், மழை மற்றும் பனி காலங்களில் தண்டவாளங்கள் சுருங்கும்.

இப்படியாக தண்டவாளங்கள் விரிவடைந்து சுருங்குவதால் விரிவடைந்து சுருங்குவதால் இரு இரும்புகள் ஒட்டியிருக்கும்படி இணைக்கப்பட்டால் விரிவடையும் போது ஒன்றோடு ஒன்று மோதுவதால் தண்டவாளம் மேல் பக்கமாக ஏறிய நிலைக்கு வந்துவடும். இதனால் ரயில்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படும். இதை தவிர்க்கவே இரண்டு தண்டவாளங்களுக்கு இடையே சிறிதளவு இடைவெளி விடப்படுகிறது. இதனால் வெயில் காலங்களில் அதிகமாக இரும்பு சூடாகும் போது விரிவடைந்தால் அந்த இடைவெளியில் நிரம்பிவிடும் தண்டவாளத்திற்கு மேலே விரிவடைவதை தவிர்க்க முடியும். இந்நிலையில் தான் ரயிலில் உள்ள சக்கரம் இரு தண்டவாளங்களையும் கடக்கும் போது சத்தம் வருகிறது. ரயில் வேகமாக செல்லும் போது ரயில் தண்டவாளத்தின் இடைவெளியை அடுத்தடுத்து ரயில் சக்கரங்கள் வேகமாக கடக்கும் போது ' தடக் தடக்' சத்தம் அதிகமாக கேட்கும்.

நீங்கள் ரயிலில் செல்லும் போது இந்த சத்தத்தை கவனித்தால் ரயிலின் முன்பகுதியிலிருந்து பின்புறம் நோக்கி செல்லும் படியாக கேட்கும். இதை சத்தம் ரயில் பயணத்தில் ஒரு இசையை கொடுக்கிறது. இதை ரயிலுக்கான ஒரு அடையாளமாக கூட இன்று சொல்கிறோம். ஆனால் இதற்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருப்பது பலருக்கு தெரிந்திருந்தாலும் சிலருக்கு தெரியாது.

No comments:

Post a Comment