Sunday, February 1, 2026

முதுமையை கொண்டாடுங்கள்

 முதுமையை கொண்டாடுங்கள்

முதுமையில் தனித்து விடப்படாமல்,எவருக்கும் பாரமாக இல்லாமல் இருக்க,  இப்போதே இதைப் புரிந்து கொள்ளுங்கள்

 01. நிலத் தகராறுகளில் தலையிடாதீர்கள்!பக்கத்து வீட்டுக்காரனுக்கு பாடம் புகட்டுகிறேன் என்று நீதிமன்ற வாசல்களில் தவம் கிடக்காதீர்கள். வழக்கு முடிவதற்குள், நீங்கள் மண்ணுக்குள் போயிருக்கலாம். நீங்கள் போராடி வென்ற நிலத்தில்,நீங்கள் அல்ல, வழக்கறிஞர்களே குடியேறுவார்கள்!

 02. பழைய வாகனங்கள் என்னும் சுமை: ஐந்து லட்சம் லாபம் என்று கருதி "செகண்ட் ஹேண்ட்" வாகனங்களை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். சாலையில் ஓடுவதை விட அது கராஜில் இருக்கும் நேரம் அதிகமானால், நெஞ்சுவலி வாகனத்திற்கு அல்ல, உங்களுக்குத்தான் வரும்.