ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு ஆடி 18ல கொண்டாடுவதன் ரகசியம்... இளைஞர்கள் தெரிந்து கொள்ள மேட்டர் உள்ளே இருக்கு...!
முன்னோர் சொல்லே மூத்த சொல் என்பார்கள். அவர்கள் எந்த ஒரு சொல்லையும் காரணமாகத் தான் சொல்வார்கள். அதனால் ஆடிப்பெருக்கை ஏன் ஆடி 18ம் தேதி செட் பண்ணி வச்சிருக்காங்கன்னு இன்றைய இளைஞர்கள் கேட்கலாம். அவர்கள் படித்துத் தெளிவு பெறவே இந்தப் பதிவு.
ஆடிப்பெருக்கு நாளை மறுநாள்
(3.8.2024) சனிக்கிழமை அன்று வருகிறது. ஆடி 18ம் நாளைத் தான் நாம் ஆடிப்பெருக்காகக் கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் தாலிக்கயிறு மாற்றுவது எப்படி, வழிபடுவது எப்படின்னு பார்ப்போமா...
இந்த உலகமே பஞ்சபூதங்களால் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அவற்றில் நீர் என்பது ஒன்று. நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவரே தெரிவித்துள்ளார். உலக இயக்கத்திற்கும், மனிதர்களின் இயக்கத்திற்கும் மிக முக்கியமானது தண்ணீர். அதை தெய்வத்திற்கு இணையாக ஒப்பிட்டு வருவதால் தான் நதிகளுக்குப் பூஜை செய்கிறோம்.