கோழி முட்டை - காடை முட்டை
கோழி முட்டையை விடவும் அதிகளவு சத்துக்கள் நிறைந்த காடை முட்டை…
·
உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.
·
வீட்டில் செய்யப்படும் உணவுகளுக்கு மதிப்பு கொடுத்தாலே நமக்கு ஆரோக்கியமான உணவு கிடைத்துவிடும் என்று சொல்லலாம்.
·
அந்த வரிசையில் முட்டை மனிதனுக்கு மிகுந்த ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக கூறப்படுகிறது.
·
முட்டையை விட 6 மடங்கு சத்து அதிகம் கொண்ட உணவாக காடை முட்டை அறியப்படுகிறது.
·
வைட்டமின், புரதம், உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் அடங்கிய கோழி முட்டையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியமானது. முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரதச்சத்துக்கள் நமக்கு உடனடியாக பலன் கொடுக்கும்.
·
வளரும் குழந்தைகள், காலையில் பள்ளிக்கு செல்லும்போது, வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் காலை உணவாக முட்டை கொடுக்க வேண்டும். அதே சமயம் பச்சை முட்டை குடிப்பது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல
·
சில நோய் கிருமிகள், முட்டையில் இருந்தால், அதனை பச்சையாக குடிக்கும்போது நமது உடலுக்கு அந்த கிருமிகள் செல்லும் அபாயம் உள்ளது. அதனால் முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லேட் மாதிரி செய்தோ சாப்பிடுவது தான் சரியாக இருக்கும்.
·
வேக வைத்த முட்டையில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உடனடியாக கிடைக்கும் திறன் உள்ளது. அதனால் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது தான் உடலுக்கு பெரிய ஆரோக்கிய நன்மையாக இருக்கும்.
·
முட்டையின் மஞ்சள் கருவில், கொழுப்பு அதிகமாக இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் அதில் உடலுக்கு தேவையான கொழுப்புகள் தான் இருக்கிறது. முட்டையை வேகவைத்து சாப்பிடும்போது, அதில் நல்ல கொழுப்பு சதவீதம் அதிகமாகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
·
அதேபோல் முட்டையில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. ஆனால் கோழி முட்டையை விட காடை முட்டையில் 6 மடங்கு சத்து அதிகம் உள்ளது.
·
காடை முட்டைகள் சிறிய அளவில் இருந்தாலும், அவை ஊட்டச்சத்துக்களைப் பெருமளவில் வழங்குகின்றன. மூன்று முதல் நான்கு முட்டைகளை சாப்பிடுவது ஒரு கோழி முட்டையில் நீங்கள் காணும் அதே அளவு புரதத்திற்கு சமம்.
·
இந்தியாவில் பிரபலம் இல்லை என்றாலும், வெளிநாடுகளில் காடை மற்றும் அதன் முட்டை மிகவும் பிரபலம். கோழி முட்டையை விடவும் காடை முட்டை அதிகளவு சத்துக்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment