Followers

Sunday, August 9, 2026

சபரிமலை

சபரிமலை முதல் முறையாகப் போகப் போறீங்களா? இதைப் படிங்க முதல்ல...!



கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்கள் தான் நம் நினைவுக்கு வருவார்கள். பயபக்தியுடன் மாலை அணிந்து விரதம் இருந்து அவர்கள் அனுதினமும் பாடல் பாடி இருமுடி கட்டிச் செல்வது சிறப்பு. இப்படிப்பட்ட அற்புதமான சபரிமலைப் பயணம் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் வாய்ப்பதில்லை.

அதற்கு நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். எண்ணம் இருந்தாலும் போவதற்கான சூழல் அமையாது அல்லவா. அப்படி வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியவான்கள் தான். முதன் முறையாக சபரிமலை செல்வோர் அதற்கான வழிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். எப்படி செல்வதுன்னு பார்ப்போமா...

சபரிமலை ஏறிச்செல்ல பாரம்பரியமாக மூன்று வழிகள் உண்டு - எருமேலிப் பாதை. வண்டிப்பெரியார் பாதை மற்றும் சாலக்காயம் பாதை.

பெரும்பாலானான ஐயப்பன்மார்கள், பெருவழி, பெரிய பாதை எனப்படும் எருமேலி வழியையே தேர்ந்தெத்து பயணிப்பார்கள். பெரியபாதை எனப்படும் வனப்பகுதியே ஐயப்பன் தன் யாத்திரைக்காக சென்ற வழி, எனவே அவ்வழியே சென்றாலே யாத்திரை பூர்த்தியாகும் என்று பழமலைக்காரர்கள் கூறுவர்.

இன்னும் ஒருபடி மேலே போய், பெரிய பாதையில் சென்று பதினெட்டாம்படி ஏறினால் மட்டுமே அது சபரியாத்திரையாகக் கணக்கில் கொள்ளப்படும் என்று கூறும் பழமைக்காரர்களும் உண்டு.

ஸாக்ஷாத் பகவான் மணிகண்டன் தன் மனித அவதார காலத்தில் பரிவார கணங்கள் சூழ தங்கிச் சென்ற பாதையாதலால், பெரிய பாதையில் ஒவ்வொரு கல்லுக்கும் கூட மஹத்துவம் உண்டு.

பண்டைய வழக்கப்படி இந்த பெரிய பாதையில் ஒவ்வொரு முக்கியமான கேந்த்ரங்களிலும் இருமுடியை இறக்கி வைத்து, அங்குள்ள பூதகணங்களுக்கும், தேவதைகளுக்கும் பூஜைகள் நடத்திய பிறகே புறப்படும் வழக்கம் இருந்தது.

ஒவ்வொரு குன்றும் ஒரு கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கோட்டையும் ஒரு தேவதையின் காவலில் இருக்கிறது. இதனால் தான் அந்தந்த தேவதையை வணங்கி உத்தரவு பெற்று அங்கிருந்து யாத்திரையை தொடர வேண்டும்.

அவர்களின் காவலை மீறிச் சென்றால் தேவதைகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற காரணத்தாலேயே பண்டைய குருஸ்வாமிகள் இரவில் யாத்திரை செய்வதை அனுமதிப்பதில்லை. (இன்றும் அந்த விதி பொருந்தும்)

1. எருமேலி

2. பேரூர் தோடு

3. காளைகட்டி

4. அழுதை

5. அழுதை நதி

6.கல்லிடுங்குன்னு

7. இஞ்சிப்பாறை- உடும்பாறை

8. முக்குழி

9. கரிவலாம் தோடு

10. கரிமலை

11. வலியானை வட்டம்

12.செரியானை வட்டம்

13. பம்பா நதி 

No comments:

Post a Comment