Followers

Sunday, August 9, 2026

பலாப்பழம்

பலாப்பழம்



முக்கனிகளுள் இரண்டாவது கனி பலாப்பழம். இந்தப் பழம் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்க கூடியது. பலாப்பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது.

மருத்துவப் பயன்கள்:

பலாபழம் மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும்.

கண் பார்வைக்கு உதவும் விட்டமின் பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது.

அடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.

பலாக்காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவைகள் குணமாகும்.

பழுத்த பலாச்சுளையில் பழ சர்க்கரை சத்து அதிகளவு உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் பலாச்சுளைகளை உண்பதை தவிர்ப்பது நல்லது.

பலாவிலுள்ள தாவர உயிர்ச்சத்துகள் புற்றுநோய் உருவாகாமல் தடுப்பதற்கும், அணுக்களுக்கு உயிரூட்டம் கொடுத்து என்றும் இளமையான தோற்றத்தையும் கொடுக்கும்.

பலாப்பாழத்தை முறையுடன் சாப்பிட்டால் கெடுதல் இருக்காது.. பலா பழத்தை சாப்பிட்ட உடன், சிறிது நெய் அல்லது கொஞ்சம் பாலை அருந்தினால் எந்த தொல்லைகளும் ஏற்படாது. வெறும் பலாப்பலத்தை சாப்பிடாது சிறிது நாட்டுச்சர்க்கரையை கலந்து சாப்பிட உடல்புத்துணர்ச்சி பெறும். தாகம் தணியும். எளிதில் சீரணமாகும். குடலுக்கு வலிமை தரும்.பலாவில் உள்ள சத்துக்கள்


பலாப்பலத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன. , சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன.

நரம்புகளை உறுதியாக்கும் வைட்டமின் உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும். வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும், நரம்புகளுக்கு உறுதி தரும். ரத்தத்தை விருத்தியாக்கும். பல் தொடர்பான நோய்களைப் போக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. தொற்றுக்கிருமிகளை அழிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும்.

No comments:

Post a Comment