வெள்ளி
ஆரோக்கியத்தை
அள்ளி வழங்கும் உலோகம் வெள்ளி, சிவப்புத் துணியில் வெள்ளியை சுற்றி வைத்தால் பெருகும் நன்மை…
·
ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட உலோகத்தால் ஆனது என்றால், அதை வீட்டின் குறிப்பிட்ட ஓர் இடத்தில் வைத்தாலே அது நல்ல மாற்றத்தை எப்போதும் வழங்கும்.
·
திருமண வைபவம் என்றாலே, வெள்ளியிலான கூஜா, செம்பு, தட்டுக்கள், குங்குமச்சிமிழ், வெள்ளி விளக்குகள் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்..
·
திருமண நிகழ்வில் மட்டுமல்லாமல், பெண்ணுக்கு கொடுத்தனுப்பும் சீதனத்திலும் வெள்ளிக்குடம், வெள்ளி செம்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம்பெறுகின்றன.
வெள்ளி பொருட்களின் முக்கியத்துவம்
·
அதேபோல, பூஜைகளிலும், வெள்ளியில் சூட தட்டு, சாம்பிராணி தட்டு, வெள்ளி விளக்கு, தட்டு, சந்தனக் கும்பா, குங்குமச்சிமிழ் என பல வகையாக வைப்பதுண்டு.
·
சில வீடுகளில் வெள்ளியில் ஆன விநாயகர் சிலை, அன்னபூரணி சிலை போன்ற பல கடவுளின் உருவச் சிலைகளையும் வைத்திருப்பார்கள்.. வெள்ளி முலாம் பூசப்பட்ட சிலைகளும் உண்டு. இதில், வெள்ளி நாணயங்களும் அடக்கம்.
·
கோவில்களில் கடவுளுக்கு வெள்ளி மூக்குத்தி, சூலாயுதம், வேல் என வெள்ளி அலங்கார பொருட்கள் என பலவகையான வெள்ளிப் பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன..
·
இந்த அளவுக்கு வெள்ளி முக்கியத்துவம் பெறுவதற்கு மருத்துவ மற்றும் ஆன்மீக காரணங்கள் உள்ளன.
ஆரோக்கியத்தை வாரி வழங்கும் வெள்ளி
·
நச்சு தன்மையை அழிக்கக்கூடியது வெள்ளி.. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது..
·
பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி கிண்ணம் ஸ்பூன் தட்டு என்று பயன்படுத்தும்போது, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது.. பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளியில் கால் தண்டை அணிவதும் இதற்காகத்தான்.
·
மேலும், வெள்ளி என்பது குளிர்ச்சியான உலோகமாகும்.. நன்கு சுத்திகரிக்கப்பட்ட பிறகுதான், வெள்ளி தேவையான பொருள்களாக உருமாறுகிறது.
·
எனவேதான், குழந்தைகளுக்கு உடலில் உஷ்ணம் நெருங்கக்கூடாது என்பதற்காகவும், நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் வெள்ளியிலான கொலுசு, கால் தண்டை, அரண்ஞான் கொடி பயன்படுத்தப்படுகிறது.
சந்திரன், சுக்கிரன் - வெள்ளி
·
உடலிலுள்ள நீர் உறுப்பு மற்றும் கப தோஷத்தைக் கட்டுப்படுத்தி, உடலையும், மனதையும் சமநிலையில் வைத்திருக்கக்கூடிய தன்மை வெள்ளிக்கு உண்டு என்பதால், வெள்ளியிலான நகைகளை உடலில் அணிய சொல்கிறார்கள்.
·
ஆன்மீகத்தில், வெள்ளிக்கு சிறப்பான இடம் உண்டு.. வெள்ளை நிறம் சந்திரனின் அடையாளமாக கருதப்படுகிறது. சிவபெருமானின் கண்களிலிருந்து வெள்ளி தோன்றியதாக சொல்வார்கள்..
·
எனவே, வெள்ளியில் தெய்வீக சக்தி நிரம்பியிருக்கிறதாம்.
·
சந்திரனுடனும் சுக்கிரனுடனும் வெள்ளி தொடர்புடையதாக உள்ளது..
·
அதுமட்டுமல்ல, வீட்டில் வெள்ளி வைத்திருப்பது எதிர்மறை சக்திகளை விரட்டியடிக்கும்.. வீட்டில் சமநிலை, பாதுகாப்பு, செழிப்பை உண்டாக்கும்.
சிவப்பு துணியில் வெள்ளி நகையை
·
எனவே, வீட்டில் வெள்ளி பாத்திரம், வெள்ளி விளக்கு என இப்படி ஏதாவது பயன்படுத்துவது நல்லது..
·
ஆனால், அவைகளை உரிய திசையில் வைப்பதால் முழுப்பலனை பெறலாம்.. வெள்ளி நகை, வெள்ளிப்பொருட்களை, வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்கலாம்..
·
அதேபோல, வெள்ளிப் பொருட்களை எப்போதும் சிவப்பு துணியில் சுற்றி வைக்க வேண்டும் என்பார்கள்..
·
இதனால், சந்திரனின் நிலை வலுப்பெற்று மன உளைச்சல் நீங்கி அமைதி கிடைக்கும். அதேபோல, வெள்ளியை சிவப்புத் துணியில் கட்டி வீட்டில் மேற்கு திசையில் வைத்தால், குடும்பத்தில் செழிப்பும், நன்மையும் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment