மூலவரின் திருப்பாதத்தின் கீழ் வற்றாத நீர்ச்சுனை - செந்நிறமாகக் காட்சியளிக்கும் மலையில் வீற்றிருக்கும் அர்த்தநாரீசுவரர்…
·
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலையில் உள்ள அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், சிவன் - சக்தி இணைந்த அர்த்தநாரீஸ்வரர் மற்றும் செங்கோட்டு வேலவர் சன்னதிகளைக் கொண்ட மிகச் சிறப்பு வாய்ந்த பழமையான ஆலயம்.
·
மூலவர் அர்த்தநாரீஸ்வரர் (மாதொருபாகன்) வலதுபுறம் சிவனாகவும், இடதுபுறம் சக்தியாகவும் 6 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார்.
·
மலையின் உச்சியில் முருகப்பெருமான் செங்கோட்டு வேலவர் என்ற பெயரில் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார்.
·
மூலவரின் திருப்பாதத்தின் கீழ் எப்போதும் வற்றாத தேவ தீர்த்தம் என்ற சிறிய நீர்ச்சுனை உள்ளது.
·
பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும், இந்த திருக்கோவிலில், மார்கழி மாதத்தில் மட்டும் அபிஷேகம் செய்து வழிபடப்படும் மரகத லிங்கம் உள்ளது.
·
இந்த திருச்செங்கோடு மலையில், ஐந்து தலைகளுடன் கூடிய ஆதிசேஷனின் உருவம் இருக்கிறது.
·
இதில் மஞ்சளும், குங்குமமும் கலந்து பூசி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
·
இதனால் நாக தோஷம் நீங்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆதிசேஷன் படமெடுத்த நிலையில் லிங்கத்தை தாங்கியிருப்பது சிறப்பரியது.
·
இப்பகுதி மலை செம்மண் நிறத்தில் இருப்பதால், பழங்காலத்தில் இத்தலம் திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்றும் அழைக்கப்பட்டது.
·
சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இத்தலம், சிலப்பதிகாரத்தில் 'நெடுங்குன்று' என்றும், தேவாரத்தில் 'திருக்கொடிமாடச் செங்குன்றூர்' என்றும் போற்றப்படுகிறது.
·
அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குச் செல்ல
1,200 படிக்கட்டுகளும், வாகனப் போக்குவரத்திற்குச் சாலை வசதியும் உள்ளன.
No comments:
Post a Comment