Followers

Tuesday, August 18, 2026

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை



·         தஞ்சாவூர் என்றாலே கலைகளின் களஞ்சியம். கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம் என பல்வேறு கலைகளுக்குப் பெயர் பெற்ற இந்த மண்ணில், தலையாட்டி பொம்மைகளும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

·         தஞ்சையின் அடையாளமாக விளங்கும் இப்பொம்மைகள் தஞ்சாவூரின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றக் கூடியவை ஆகும்.

·         19-ம் நூற்றாண்டில் சரபோஜி மகாராஜாவின் ஆட்சிக் காலத்தில்தான் இந்தப் பொம்மைகள் முதன்முதலில் உருவாக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

·         காவிரி ஆற்றங்கரையில் கிடைக்கும் தனித்துவமான களிமண்ணைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தப் பொம்மைகள், காலப்போக்கில் தஞ்சாவூரின் அடையாளமாக மாறின.

·         தஞ்சை பொம்மைகள் பொதுவாக ராஜா மற்றும் ராணி ஜோடிகளாகவே செய்யப்படுகின்றன.

·         இவை தவிர நடன மங்கை தலையாட்டி பொம்மைகள்,தாத்தா-பாட்டி தலையாட்டி பொம்மைகள்,நவீன கதாபாத்திர தலையாட்டி பொம்மைகள்,பாரம்பரிய கதாபாத்திர தலையாட்டி பொம்மைகள் என பல்வேறு வகைகளில் இப்பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.

·         தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளின் சிறப்பம்சம் என்னவென்றால், இவற்றை எந்தப் பக்கம் சாய்த்தாலும் கீழே விழாமல் மீண்டும் நேராக நிமிர்ந்து நிற்கின்றன.

·         இந்த பொம்மைகள் அடிப்பகுதியில் பெரியதாகவும், எடையில் மிகுந்ததாகவும், மேற்புறம் குறுகலாகவும், எடை குறைவாக இருக்கும் விதமாகவும் உருவாக்கப்படுகின்றன.

·         தலையாட்டி பொம்மையின் ஈர்ப்பு மையம் மற்றும் எடை அதன் அடிப்பகுதியில் குவிந்திருக்கும். இதனால், மெதுவாகத் தொடும்போது அதிக அசைவுகளுடன் நடனமாடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

·         அடிப்பாகம் அரைக்கோள வடிவத்தில் அமைக்கப்படுவதால், பொம்மையை எந்தப் பக்கம் சாய்த்தாலும், புவியீர்ப்பு விசையின் காரணமாக, அடிப்பாகத்தில் உள்ள எடையே பொம்மையை மீண்டும் நேராக நிற்க வைக்கிறது.

·         அதுமட்டுமின்றி நாம் பொம்மைகளை தரையில் படுக்க வற்புறுத்தும்போதும் ​​அவை எதிர்த்து நிமிர்ந்து நிற்கும். இது ஒரு ஆச்சரியத்திற்குரிய கலை அம்சமாகும்,

·         எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து நிற்கும் இந்த பொம்மைகளைப் போல, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு, தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்ற அரிய பாடத்தை நமக்கு கற்றுத் தருகின்றன.

 

No comments:

Post a Comment